சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

3 தயாரிப்பாளர்களிடம் காலில் விழாத குறையாக கெஞ்சிய சிம்பு.. மாநாட்டில் பிரிந்த மொத்த காசும் காலி

Actor Simbu: எப்பொழுதுமே ஒரு பொருள் நம்மகிட்ட இருக்கும் பொழுது அதோட அருமை தெரியாது என்று சொல்வார்கள். அப்படித்தான் சிம்புவிற்கு புத்தி தெளிகிற மாதிரி ஒரு விஷயம் நடந்திருக்கிறது. பொதுவாக சிம்பு மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் இருந்திருக்கிறது. அதில் முக்கியமானது ஒன்று சரியான நேரத்தில் சூட்டிங் வரமாட்டேங்கிறார். அவர் இஷ்டப்படி தான் கால்ஷீட் கொடுக்கிறார்.

இதுபோன்ற சில பிரச்சினையால் தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். இதனால் சிம்புவை வைத்து படம் எடுக்க நினைத்த இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தெரியாத்தனமாக இவரிடம் மாட்டிக் கொண்டு விட்டோமே என்று புலம்பி இருக்கிறார்கள். ஆனால் தற்போது சிம்புவின் நிலைமை எப்படி இருக்கிறது என்றால் தயாரிப்பாளர்களிடம் காலில் விழாத குறையாக கெஞ்சும் அளவிற்கு மாறிவிட்டது.

அதாவது சிம்பு நடிப்பில் கடந்த வருடம் மார்ச் மாதம் பத்து தல திரைப்படம் வெளிவந்தது. இப்படமும் பெருசாக சொல்லும் படி வசூல் அளவில் லாபத்தை கொடுக்கவில்லை. மேலும் கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகியும் இன்னும் இவருடைய அடுத்த படம் வரவில்லை. இதற்கு முன்னதாக வெளிவந்த வெந்து தணிந்தது காடு படமும் பெருசாக மக்களிடம் ரீச் ஆகவில்லை.

Also read: கொஞ்சம் அசந்ததனால் சிம்புக்கு வந்த நிலை.. GVM படத்துக்கு பின் STR எடுத்த தடாலடி முடிவு

அந்த வகையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த மாநாடு படம்தான் சிம்புவிற்கு ஒரு திருப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்து வசூல் அளவில் லாபத்தை சம்பாதித்து கொடுத்தது. அதனாலயே கையில் பணம் கூடியதால் ஓவராக ஆட்டம் போட்டார். அந்த சமயத்தில் தயாரிப்பாளர்களை கொஞ்சம் கூட மதிக்காமல் சுற்றி வந்தார்.

ஆனால் தற்போது கையில் எந்த படமும் இல்லை, கமல் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு அவருடைய 48வது படத்தில் நடிக்கப் போவதாக இருந்தது. ஆனாலும் இப்பொழுது வரை இந்த படத்திற்கான எந்த ஒரு பிள்ளையார் சுழியும் போடவில்லை. அதே நேரத்தில் சிம்புவிற்கு மாநாடு படத்தின் மூலம் கிடைத்த மொத்த பணமும் காலியாகிவிட்டது.

இதனால் வேறு வழி இல்லாமல் தற்போது ஒவ்வொரு தயாரிப்பாளரை தேடி அலைகிறார். அந்த வகையில் சத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனம், லைக்கா மற்றும் சுரேஷ் காமாட்சி போன்றவர்களுக்கு போன் போட்டு படம் பண்ணலாமா என்று கெஞ்சி கேட்டு வருகிறார். ஆனால் சிம்புவை பற்றி தெரிந்ததனால் தயாரிப்பாளர்கள் எந்த பதிலும் சொல்லாமல் ஒவ்வொருவரும் எஸ்கேப் ஆகி வருகிறார்கள்.

Also read: விஷால் கல்யாணம் பண்ணாமல் இருப்பதற்கு இதுதான் காரணமா.? உடம்பில் இவ்ளோ பிரச்சனையா, உதவி செய்யும் சிம்பு

Trending News