திரும்பத் திரும்ப மல்லுக்கட்டும் சிம்பு-தனுஷ்.. ஒரே போடாய் எஸ்டிஆர் கையில் எடுக்கும் புது ஆயுதம்

திரை உலகில் முன்னணியில் இருக்கும் நடிகர்களுக்குள் போட்டி இருப்பது சகஜம்தான். ரஜினி, கமல் விஜய், அஜித் போன்ற போட்டி நடிகர்களின் திரைப்படங்கள் வரும்போது எப்போதுமே ஒரு பரபரப்பு இருக்கும். அந்த வரிசையில் இவர்களுக்கு பின் போட்டி நடிகர்களாக பார்க்கப்படுபவர்கள் தான் தனுஷ், சிம்பு இருவரும்.

இவர்கள் இருவருக்குமே ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதனாலேயே இவர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும்போது அவர்களுக்குள் சோஷியல் மீடியாவில் வாக்குவாதமும் சண்டையும் ஏற்படும். சம்பந்தப்பட்ட நடிகர்கள் இருவரும் நாங்கள் நண்பர்கள்தான் என்று கூறினாலும் ரசிகர்களுக்கிடையே இருக்கும் பிரச்சனை மட்டும் இன்னும் தீர்ந்தபாடில்லை.

Also read:பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டும் விஷால்.. சிம்புவிற்கு இழைக்கப்பட்ட அநீதி

ஆனால் இப்பொழுது தனுஷ் மற்றும் சிம்பு இருவருக்கும் இடையே ஒரு பனிப்போர் நடந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. ஏனென்றால் தனுஷ் தமிழ் மட்டுமல்லாமல் பாலிவுட், ஹாலிவுட் என்று வேற லெவலுக்கு சென்று விட்டார். ஆனால் சிம்பு இன்னும் தமிழ் திரைப்படங்களில் மட்டுமே நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதனால் அவர் விரைவில் பாலிவுட் திரையுலகில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். அதுவும் ஒரு பாடகராக களம் இறங்க இருக்கிறார். ஹிந்தி படத்தில் ஒரு பாடலை பாட இருக்கும் சிம்பு அதை தொடர்ந்து பாலிவுட்டில் நடிக்கவும் இருக்கிறாராம்.

Also read:சிம்பு மார்க்கெட்டை கெடுத்த 5 படங்கள்.. ட்ரைலரை வைத்து ஏமாற்றிய மொக்க படம்

அந்த வகையில் அவர் தற்போது அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறார். அதுவும் அவர் நடிக்கும் படம் சாதாரணமாக இல்லாமல் பான் இந்தியா படமாக இருக்க வேண்டும் என்று அவர் முடிவெடுத்து இருக்கிறார். அதனால்யே அவர் தற்போது கதை கேட்பதில் அதிக கவனம் காட்டி வருகிறாராம்.

கூடிய விரைவில் சிம்புவின் பாலிவுட் அறிவிப்பு வெளிவர இருக்கிறது. தற்போது தமிழில் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வரும் அவர் முன்னணி இயக்குனர்களிடமும் கதையை கேட்டுக் கொண்டிருக்கிறார்.

Also read:அடமொழிக்கு ஆசைப்படாத 6 நடிகர்கள்.. கோடி கும்பிடு போட்டு ஓடிய தனுஷ்