சிம்பு தற்போது Thug Life படத்தில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார். ஆனால் அவர் இந்த படத்தில் கமிட் ஆனார், அந்த படத்தில் கமிட் ஆனார், என்ற தகவல் மட்டும் தான் வருகிறதே தவிர, ஷூட்டிங் ஆரம்பித்த பாடும் இல்லை.. படம் வெளியான பாடும் இல்லை. இப்படி இருக்க, சமீபத்தில் சிங்கப்பூரில் யுவன் கான்செர்ட்-ல் கலந்துகொண்டு பாடினார் சிம்பு.
இதற்க்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்ததை தொடர்ந்து, அவர் ஒரு முக்கிய முடிவை எடுத்திருக்கிறார். சிம்பு இதுவரை கிட்டத்தட்ட 150 பாடல்கள் பாடி இருப்பார். அந்த பாடல்களில் பெரும்பாலான பாடல்கள் சூப்பர்ஹிட் பாடல்கள் தான். இதில் வெறும் ஒரு 20 பாடல்களை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு ஊரிலும் பாடினாலே நல்லா கல்லா கட்டலாம் போலையே என்று நினைத்திருக்கிறார்.
படம் ஒன்னு ரிலீஸ் ஆனபாடில்லை
இந்த நிலையில், அவரது இந்த முடிவு, நிறைய சிம்பு ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்திருந்தாலும், ஒரு சிலர்-க்கு இவருக்கென்ன, என்ன செய்வது என்று தெரியாமல், ஒப்பேற்றி கொண்டு இருக்கிறாரா என்ற சலிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்க்கு காரணம் அவரது கொரோனா குமார் படம் இதுவரை ஷூட்டிங் கூட ஆரம்பிக்க படவில்லை
தவிர, இவர் கமிட் ஆனதாக சொன்ன எந்த படத்திலும் ப்ரீ production வேலை கூட ஆரம்பிக்கவில்லை. இவர் உண்மையில் என்ன தான் செய்கிறார்.. இவரது செய்தி கேட்டாலே சலிப்பாக இருக்கிறது என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். படத்தோட அப்டேட் மட்டும் வந்து, படம் வரலை என்றால் நிச்சயம் அது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தோடு ஒரு கட்டத்துக்கு மேல் ஆர்வம் இல்லாமல் ஆகிவிடும்..
அது தான் தற்போது நிகழ்ந்து வருகிறது. சிம்பு அடுத்ததாக வெற்றிமாறன் கதையில் நடிக்கவிருக்கிறார் என்றெல்லாம் செய்தி வந்ததே, அதாவது நடக்குமா? எப்போ தான் படத்தை ஆரம்பிப்பீர்கள் என்று கேட்க ஆரம்பித்துவிட்டனர்.