சிம்பு சிறு வயதிலிருந்தே தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள சிம்பு தற்போது மாநாடு படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் என்று தான் கூற வேண்டும்.
ஏனென்றால் சமீபகாலமாக அவரது படம் எதுவுமே சரியாக ஓடவில்லை அதையும் தாண்டி பல பிரச்சனைகளை சந்தித்தார் சிம்பு. தயாரிப்பாளர் தரப்பில் இவரது படப்பிடிப்பு நடக்கக் கூடாது, படம் வெளிவரக் கூடாது என்பது போன்ற பல பிரச்சனைகளையும் குடைச்சல் கொடுத்து வந்தனர்.
அதையும் மீறி சிம்பு மாநாடு படத்தின் மூலம் வெற்றி கண்டுள்ளார். வேல்ஸ் யுனிவர்சிட்டி தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர் என்பதால் சிம்புவிற்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. எவ்வளவு திறமையான நடிகர்கள் இருந்தும் சிம்புவிற்கு ஏன் இந்த பட்டம் வழங்கப்பட்டது உங்கள் தயாரிப்பில் நடிப்பதாள் தான் இந்த பட்டம் கொடுத்து விட்டீர்களா.?
சிம்பு ஐசரி கணேஷ் தயாரிப்பில் வெந்து தணிந்தது காடு நடித்து வருவதால்தான் இவருக்கு டாக்டர் பட்டம் தருவதாக பலரும் கூறிவந்தனர். ஆனால் ஐசரி கணேஷ் தன்னுடைய தயாரிப்பில் சிம்பு நடிப்பதால் டாக்டர் பட்டத்தை தரவில்லை எனவும் மேலும் சிம்பு சிறுவயதிலிருந்தே நடித்து வருகிறார்.
சிம்பு நடிப்பை தாண்டி நடனம், பாடல் எழுதுவது, கதை எழுதுவது, இயக்குவது, தயாரிப்பு என்று பல முகங்களைக் கொண்டவர் என்பதால் சிம்புவிற்கு டாக்டர் பட்டம் தருவதாக விளக்கம் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஒரு சிலர் இத்தனை வருடமாக சிம்புவிற்கு உங்க கண்களுக்கு தெரியலையா.? இப்ப எதற்கு டாக்டர் பட்டம் தர வேண்டும் அவர் கூறுவது சரியாக இருந்தாலும் இவரது தயாரிப்பில் நடிப்பதற்காக தான் சிம்புவிற்கு டாக்டர் பட்டம் தருவதற்கு முக்கிய காரணம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். எது எப்படியோ சிம்பு ரீ-என்ட்ரி மூலம் தமிழ் சினிமாவில் ஒரு கலக்கு கலக்குவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.