சிம்புவே மனம் மாறி தொடர்ந்து படங்களில் நடிக்கலாம் என ஆசைப்பட்டாலும் அவரது கிரகம் அவரை சும்மா விடுவதே இல்லை. அவர் நடிக்கப்போகும் ஒவ்வொரு பாடத்திற்கும் ஏகப்பட்ட பஞ்சாயத்துகள்.
இந்நேரம் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்க வேண்டியது. தன்னுடைய பொறுப்பின்மையின் காரணமாக சினிமாவில் மார்க்கெட் இல்லாமல் தடுமாறி கொண்டிருக்கிறார் சிம்பு. இருந்தாலும் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன.
சமீபகாலமாக பட தயாரிப்பாளரான மைக்கேல் ராயப்பன் என்பவருக்கும் சிம்புவுக்கும் இடையில் பஞ்சாயத்துகள் வழுத்துக் கொண்டிருக்கின்றன. AAA படம் தோல்வியடைந்த போது அந்த தயாரிப்பாளருக்கு இலவசமாக ஒரு படம் நடித்துக் கொடுக்கிறேன் என வாக்கு கொடுத்துவிட்டு அதிலிருந்து சிம்பு பின்வாங்கியதாக பிரச்சனைகள் எழுந்துள்ளன.
இதன் காரணமாக தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் பல படங்களுக்கும் சிக்கல்களை உண்டாக்கி வருகின்றனர். இருந்தாலும் இதையெல்லாம் மீறி படப்பிடிப்பில் கலந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கிறார் சிம்பு.
அந்தவகையில் செப்டம்பர் மாதத்தில் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா இயக்குனர் கோகுல் இயக்கத்தில் உருவாகும் கொரானா குமார் படத்திலும், நெடுஞ்சாலை இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்திலும், கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்திலும் மாறி மாறி நடிக்க உள்ளாராம்.
தற்சமயம் சிம்புவின் மாநாடு படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூலையும் குவித்தால்தான் அவருடைய அடுத்தடுத்த படங்களுக்கு சிக்கல் ஏற்படுவது குறையும் என்கிறார்கள் சிம்புவின் நலம் விரும்பிகள். இதனால் மாநாடு பட ரிலீஸை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாராம் சிம்பு. ஆனால் அந்தப் படத்திற்கும் ஏதாவது எதிர்ப்பைக் கிளப்பி ரிலீஸ் செய்ய விடாமல் செய்து விடுவார்களோ? என்ற கவலையும் அவருக்கு இருக்கிறதாம்.