தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் தான் நடிகர் சிம்பு. இவர் சினிமாவில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே இயக்குனர், பாடகர், நடிகர், கதாசிரியர் என தனது பன்முகத் திறமையை வெளிப்படுத்தி திரைத்துறையை மிரள விட்டார்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே சிம்புவின் நடிப்பில் வெளிவரும் எந்த ஒரு படமும் சொல்லிக் கொள்ளும் வகையில் இல்லை. இதனால் அவருடைய ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தில் இருந்து வந்தனர்.
இந்நிலையில் சிம்பு தனது ரசிகர்களுக்காக, சமீபத்தில் உடல் எடையை பெருமளவு குறைத்து பிட்டாக மாறியதோடு, தன்னுடைய கேரியரிலும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்.
அந்த வகையில் தற்போது சிம்புவின் நடிப்பில், குறுகிய காலத்தில் எடுக்கப்பட்டு, பொங்கல் அன்று ரிலீசாக ‘ஈஸ்வரன்’ திரைப்படம் காத்திருக்கிறது. அதோடு, சிம்புவின் செகண்ட் இன்னிங்சை காண அவருடைய ரசிகர்களும் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.
தற்போது சிம்புவின் அபரிமிதமான மாற்றத்தை ஒப்பிட்டு பார்க்கும் வகையில், கடந்த 2019ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படமும், 2020ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படமும் இணைக்கப்பட்ட ஒரு புகைப்படம், இணையத்தில் வெளியாகி, சிம்புவின் ரசிகர்களால் அதிகளவு ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் சிம்புவை கிண்டலடித்த அனைவரும் இந்த இரு படங்களுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை பார்த்து வாயடைத்துப் போய் உள்ளனராம்.