ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

பாலியல் தொல்லைக்கு ஆளான சிம்புவின் ரசிகை.. வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்

மாநாடு திரைப்படத்திற்குப் பிறகு தற்போது சிம்புவின் நடிப்பில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கிறது. இந்த திரைப்படத்தை அவருடைய ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து வருகின்றனர்.

திரையுலகில் ஏராளமான ரசிகர்களை கொண்ட சிம்புவுக்கு பெண் ரசிகைகள் ஏராளமாக இருக்கின்றனர். அதில் பிரபல சீரியல் நடிகை ஸ்ரீநிதி, சிம்புவை காதலிப்பதாக சமீபத்தில் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர்.

அந்த வகையில் இவர் சில நாட்களுக்கு முன்பு சிம்புவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக கூறி அவரின் வீட்டின் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தி பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். இதனால் அவர் குறித்து ஏகப்பட்ட விமர்சனங்கள் சோஷியல் மீடியாவில் பரவி வந்தது.

ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத ஸ்ரீநிதி சோஷியல் மீடியாவில் பல்வேறு விஷயங்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது தனக்கு நேர்ந்த ஒரு பாலியல் தொல்லை பற்றி வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

இவரிடம் ஒரு ஷோ பற்றி பேச வேண்டும் என்று ஒரு பிரபலம் அவருடைய அலுவலகத்திற்கு வர கூறியிருக்கிறார். அதனால் அங்கு சென்ற ஸ்ரீநிதி அவருடைய அலுவலகம் பார்ப்பதற்கு வீடு போன்ற அமைப்பில் இருந்ததாகவும், உள்ளே ஆபீஸ் போன்று செட் செய்து வைத்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அங்கு சென்ற அவரை அந்த நபர் தன்னுடைய மடியில் உட்காரும்படி கூறியிருக்கிறார். இதனால் பயந்து கொண்டு உட்கார்ந்த ஸ்ரீநிதி தன்னுடைய நண்பர்கள் வெளியில் இருப்பதாக கூறி அவரிடம் இருந்து தப்பிச் சென்றுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் தனக்கு மட்டுமல்லாமல் சின்னத்திரையில் இருக்கும் பல நடிகைகளுக்கும் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Trending News