ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

நண்பன் தனுஷை ஃபாலோ பண்ணும் சிம்பு.. 50வது பட ஸ்பெஷல் அப்டேட்

Simbu: சிம்பு இப்போது மணிரத்தினம் கமல் கூட்டணியின் தக் லைப் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதை அடுத்து தேசிங்கு பெரியசாமி படம், ஏ ஜி எஸ், டான் பிக்சர்ஸ் என அடுத்தடுத்த ப்ராஜெக்ட்டுகளில் கவனம் செலுத்த இருக்கிறார்.

இது தவிர வெளிநாட்டு தொழிலதிபர் தயாரிக்கும் ஒரு படத்திலும் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அது கொஞ்சம் தாமதமாகும் நிலையில் தற்போது அவர் நண்பன் தனுஷை பின்பற்றும் முடிவில் இருக்கிறாராம்.

தனுஷ் தற்போது நடிப்பு மட்டுமல்லாமல் இயக்கத்திலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் இயக்கி நடித்து வெளியான ஐம்பதாவது படமான ராயன் சக்கை போடு போட்டது.

ஐம்பதாவது படத்தை இயக்கும் சிம்பு

அதேபோல் சிம்புவும் தற்போது தன் ஐம்பதாவது படத்தை இயக்க முடிவு செய்திருக்கிறார். ஏற்கனவே இவர் மன்மதன் படத்தின் திரைக்கதையை எழுதியிருந்தார். அதேபோல் வல்லவன் படத்தை இயக்கியிருந்தார்.

அதன் பிறகு நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இவர் ஐம்பதாவது படத்தின் மூலம் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட் கொடுக்க இருக்கிறார். இப்படத்தை அவரே தயாரிக்கலாம் என்றும் ஒரு தகவல் கசிந்து வருகிறது.

மேலும் தேசிங்கு பெரியசாமியின் படம் கொஞ்சம் தாமதமாகி வருவதால் அது கூட 50 ஆவது படமாக வரலாம் எனவும் பேசப்பட்டு வருகிறது. எது எப்படி இருந்தாலும் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News