திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அரசியல் ஆசையில் விஜய்யை ஃபாலோ செய்யும் சிம்பு.. மணக்க மணக்க எஸ்.டி.ஆர் செய்த சம்பவம்

சிம்பு தற்போது சினிமாவில் தனது செகண்ட் இன்னிங்ஸை தொடங்கிய பட்டையை கிளப்பி வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இவரின் மாநாடு படம் அதிரபுதிரி ஹிட் அடித்தது. இதைத்தொடர்ந்து சிம்பு கை வைத்தது எல்லாம் பொன்னாக மாறி வருகிறது. அந்த வகையில் மாநாடு படத்திற்கு அடுத்து வெளியான வெந்து தணிந்தது காடு படமும் ஹிட்டுதான்.

மேலும் சமீபத்தில் பத்து தல படத்தில் சிம்பு நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல லாபத்தை தான் ஈட்டி தந்துள்ளது. மேலும் பத்து தல ஆடியோ லான்ச் பங்க்ஷனில் கூட ரசிகர்கள் தனக்கு இனி எதையும் செய்ய வேண்டாம் என்று கூறியிருந்தார். அவர்களுக்காக நான் பல விஷயங்கள் செய்ய இருப்பதாகவும் வாக்குறுதி கொடுத்தார்.

Also Read : விரல் வித்தையால் பெருத்த அடிவாங்கிய சிம்புவின் 5 படங்கள்.. எஸ்டிஆர்-இன் கேரியரையே மாற்றிய இயக்குனர்

அதன் விளைவாக தற்போது ஒரு சம்பவம் செய்துள்ளார். அதாவது கடந்த சில வருடங்களாகவே தளபதி விஜய்க்கு அரசியல் ஆசை வந்துள்ளது. இதனால் அடிக்கடி தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். மேலும் பிரியாணி விருந்து வைப்பதை விஜய் வாடிக்கையாகவே வைத்துள்ளார்.

அந்த வகையில் கடைசியாக பனையூரில் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்த போது பிரியாணி விருந்து வைத்திருந்தார். இப்போது சிம்புவும் தனது வீட்டில் ரசிகர்களை அழைத்து பிரியாணி விருந்து வைத்துள்ளார். அதுமட்டுமின்றி அவர் கைகளால் ரசிகர்களுக்கு பிரியாணியை பரிமாறி உள்ளார்.

Also Read : ஆண்டவரே களத்தில் இறங்கி தீர்த்து வைத்த பஞ்சாயத்து.. சிம்புக்காக முட்டி மோதும் கமல்

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் திடீரென சிம்பு ரசிகர்களை அழைத்து விருந்து வைத்ததற்கான காரணம் என்ன என்று பலரும் பேசி வருகின்றனர். அதாவது விஜய் போல சிம்புக்கும் அரசியல் மீது ஆசை வந்துள்ளதால் ரசிகர்களுக்கு மணக்க மணக்க பிரியாணி விருந்து வைத்துள்ளார் என அவரது நெருங்கிய வட்டாரத்தில் உள்ளவர்கள் கூறுகின்றனர்.

simbu-cinemapettai

Also Read : வடசென்னை படத்திற்கு சிம்புவுக்கு முன்னாடியே தேர்வான ஹீரோ.. வெற்றிமாறன் செய்த ராஜதந்திரம்

Trending News