திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

நன்றி மறந்த சிம்பு.. டிஆர்-ரை மதிக்காத STR

Simbu forgets the help of Isari Ganesh: ஆறு வயசுல இருந்து சினிமாவில நடிச்சுட்டு இருக்கிறார் நம்ம சிம்பு. கமலுக்கு அடுத்தபடியா பன்முகத் திறமையோட தமிழ் சினிமாவில் மனம் வரும் சிம்புவிற்கு மேற்கண்ட தகுதியின் அடிப்படையில் வேல்ஸ் யுனிவர்சிட்டியின் சார்பாக டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இதை கேட்டு ஆனந்த கண்ணீர் விட்டார் டி ராஜேந்தர்.

சில காலங்களாக சிம்புவின் படங்கள் தோல்வியில் முடிய மாநாடு,வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற படங்களின் வழியே கம்பேக் கொடுத்து  சரிந்த மார்க்கெட்டை உயர்த்தினார் சிம்பு. தற்போது கமலின் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில்  STR48 என்ற படத்தில் நடிக்கிறார்.

சமீபத்தில் சிம்புவின் பிறந்தநாளை ஒட்டி ரசிகர்களுக்கு விருந்தாக STR48 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. லண்டனில் இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருவதாக படக்குழு அறிவித்துள்ளது. தற்போது இந்த படத்தின் பணியை பாதிக்கும் வண்ணம் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மற்றும் சிம்புவிற்கு இடையேயான பிரச்சனை வலுப்பெற்று உள்ளது.

Also read: தனுஷுக்கு போட்டியாக சிம்பு கைவசம் இருக்கும் 5 பார்ட் 2 படங்கள்.. மாஸாக ரெடி ஆகும் STR 50

வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார் மற்றும் ஒரு படம் என மூன்று படத்திற்கு மொத்தமாக அட்வான்ஸ் வாங்கிய சிம்பு, வெந்து தணிந்தது காடு படத்தை மட்டும் முடித்து கொடுத்து, என்னுடைய மார்க்கெட் எகிறி விட்டது கொரானா குமார் படம் பண்ண வேண்டும் என்றால் அதிக சம்பளம் வேண்டும் என்றாம் சிம்பு.

சிம்புவின் தந்தை ராஜேந்தர் உடல்நல பிரச்சனை காரணமாக வெளிநாட்டில் ட்ரீட்மென்ட் எடுத்த போது அனைத்து உதவிகளையும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் செய்து வந்துள்ளார். ஆனால்  நன்றி மறந்தவராக தற்போது சம்பள பிரச்சனை என்ற ஒரு காரணத்தை கூறி ஐசரி கணேஷை கொஞ்சம் கூட மதிக்காமல் நடந்து வருகிறாராம் சிம்பு.

நாயகன் டயலாக்கில் வந்த மாதிரி நல்லவரா கெட்டவரா என்பதை கடைசி வரை குழப்பத்திலேயே வைத்திருப்பார் சிம்பு. விழா ஒன்றில் படப்பிடிப்புக்கு நான் ஒழுங்காக வாரான்னா, இல்லையான்னு பார்க்காதீங்க ஒழுங்கா நடிக்கிறனான்னு பாருங்க என்று அலப்பறையை கிளப்பியிருந்தார்.

அதிரடியாக பேசுகிறேன் என்ற முறையில் ஆட்டிட்யூட் காட்டும் சிம்புவை என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஐசரி கணேஷின் விஷயத்தில் தந்தையின் அறிவுரையையும் மதிப்பதில்லையாம் சிம்பு. ஒரு தந்தையாக சினிமாவிலும் நிஜ வாழ்விலும் தன் மகனை விட்டுக் கொடுக்காத டி ராஜேந்தர் இவரின் செயல்களால் மனவருத்தம் அடைந்துள்ளார் என்பதே உண்மை.

Also read: சிம்பு, ஆர்ஜே பாலாஜியால் நொந்து போன ப்ரொடியூசர்.. பெருமைக்கு குதிரை ஓட்டின கதை தான்

Trending News