செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

அடுத்த மாநாடுக்கு ரசிகர்களை திரட்டும் சிம்பு.. விஜய்யின் மேடையை விட பிரம்மாண்ட ஏற்பாடு

சிம்பு மாநாடு வெற்றிக்கு பிறகு படு பிஸியாக சுற்றி வருகிறார். ஏனென்றால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. மேலும் சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான வெந்து தணிந்தது காடு படமும் நல்ல வசூலை பெற்றது. இப்போது பத்து தல படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் வருகின்ற மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் மீண்டும் ஒரு மாநாடை திரட்ட இருக்கிறார் சிம்பு. அதுவும் விஜய்யின் மேடையை விட பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்துள்ளார். அதாவது விஜய்யின் ஆடியோ லான்ச் பங்க்ஷன் என்றாலே ரசிகர்கள் விழா கோலம் கொள்வார்கள்.

Also Read : எந்த பால் போட்டாலும் சிக்ஸர் அடிக்கும் பிரதீப் ரங்கநாதன்.. லவ் டுடே படத்தால் சிம்பு இடத்தை தட்டி தூக்கிய ஹீரோ

ஏனென்றால் மிகப் பிரம்மாண்டமாக நடக்கும் அந்த நிகழ்ச்சியில் விஜய்யின் பேச்சைக் கேட்க ரசிகர்கள் திரண்டு இருப்பார்கள். அதுவும் அவரது குட்டி ஸ்டோரிக்கு என்று ரசிகர்கள் உள்ளனர். அப்படி மாநாடு போல விஜய்யின் ஆடியோ லான்ச் பங்க்ஷன் நடக்கும்.

கடைசியாக விஜய்யின் வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் பங்க்ஷனையும் தில் ராஜு பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்திருந்தார். இப்போது சிம்புவின் பத்து தல படத்தின் ஆடியோ லான்ச் பங்க்ஷன் மார்ச் 18 ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்க உள்ளது.

Also Read : விஜய்க்கு சிம்பு கொடுத்த மாஸ் என்ட்ரி.. அதே சந்தோஷத்தை வாரிசு நடிகருக்கு திருப்பிக் கொடுத்த எஸ்டிஆர்

இதற்கு முன்னதாக எப்போதுமே இல்லாதது போல இந்த முறை விஜய் ரசிகர்களை தாண்டி சிம்பு அதிக ரசிகர்களை திரட்ட இருக்கிறாராம். மேலும் சிம்புவின் ஆசைக்கு ஏற்ப மிகப் பிரம்மாண்டமாக இந்த நிகழ்ச்சியை செய்ய தயாரிப்பாளரும் முடிவெடுத்துள்ளாராம்.

அதுமட்டுமின்றி பத்து தல ஆடியோ லான்ச்சுக்கு சிறப்பு விருந்தினராக சூர்யாவை அழைத்திருக்கிறார்களாம். மேலும் மிஸ்கின் படத்திற்காக தற்போது சிம்பு பாங்காங்கில் பயிற்சி எடுத்து வருகிறார். விரைவில் பத்து தல ஆடியோ லான்ச்காக சிம்பு சென்னை வர இருக்கிறார். இந்நிகழ்ச்சியில் சிம்பு அரசியல் பேச இருக்கிறாராம்.

Also Read : சிம்புவின் தோற்றம் வெட்கமாகவும், ஏமாற்றமாகவும் உள்ளது.. நம்பி ஏமாந்த பத்து தல இயக்குனர்

Trending News