வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

சிம்பு கௌதம் மேனன் கூட்டணியில் இணையும் முன்னாள் காதலி? எக்கச்சக்க எதிர்பார்ப்பை கிளப்பும் புதிய படம்

அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு மீண்டும் சிம்பு மற்றும் கௌதம் மேனன் கூட்டணியில் சிம்புவின் 47 வது படம் உருவாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். மேலும் இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

கௌதம் மேனன் ஒரு வெற்றிப்படம் கொடுத்து நீண்ட நாட்களாகிவிட்டது. வெற்றி கிடைக்காத விரக்தியில் இயக்கமே வேண்டாம் என தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். மலையாளம் தமிழ் என மாறி மாறி குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லன் வேடங்களிலும் நடித்து வருகிறார்.

கௌதம் மேனன் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், டிரான்ஸ் போன்ற திரைப்படங்கள் கௌதம் மேனன் நடிப்புக்கு சான்றாக அமைந்தது. அந்த வகையில் அடுத்ததாக கௌதம்மேனன் வேறு சில படங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது கௌதம் மேனன் அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு மீண்டும் சிம்புவுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சிம்புவின் முன்னாள் காதலி நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறதாம்.

நயன்தாரா ஏற்கனவே வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்காக சமீபத்தில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கண்டிப்பாக சிம்பு நயன்தாரா கூட்டணி நீண்ட நாட்களுக்கு பிறகு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முழுக்க முழுக்க காதல் கதையாக இருக்கும் அதிக வாய்ப்பு இருக்கிறதாம்.

simbu-nayanthara-cinemapettai
simbu-nayanthara-cinemapettai

இதனால் மீண்டும் சிம்பு நயன்தாரா காதல் துளிர் விட்டு விடுமோ என பலர் கவலையில் இருக்கிறார்கள். பலரை விட அந்த ஒருத்தர் தான் கண்ணும் கருத்துமாக நயன்தாராவை பார்த்து வருகிறாராம்.

Trending News