வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

இன்ப அதிர்ச்சி கொடுத்த சிம்பு.. சரத்குமார், விஜய் சேதுபதிக்கு எல்லாம் குருனு காட்டப்போகும் எஸ்டிஆர்

Simbu – sarathukumar – vijay Sethupathi :  சிம்புவுக்கு இப்போது தொட்டதெல்லாம் பொன்னாகி கொண்டிருக்கிறது. தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் சிம்பு இப்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் இரண்டு கெட்டப்பில் சிம்பு நடிப்பது தெரிய வந்தது.

ஆனால் இதில் செம டு ஒன்று காத்திருக்கிறது. அதாவது இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக சிம்புவுக்கு பயிற்சி கொடுகிறார்களாம். அதாவது அந்த வில்லன் கதாபாத்திரத்தில் முதல்முறையாக சிம்பு திருநங்கையாக நடிக்க இருக்கிறார்.

இதற்காக அவரது உடல்மொழி, பாவனை ஆகியவற்றை திருநங்கை போல் மாற்ற பயிற்சி எடுத்து வருகிறாராம். இதனால் இந்த படம் வேறு தரத்தில் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதோடு இந்த கதாபாத்திரத்திற்காக சிம்பு மெனக்கெட்டு பல்வேறு விஷயங்கள் செய்து வருகிறாராம்.

Also Read : நன்றி மறந்த சிம்பு.. டிஆர்-ரை மதிக்காத STR

அதோடு இதற்கு முன்னதாக சரத்குமார் காஞ்சனா படத்திலும், விஜய் சேதுபதி சூப்பர் டீலக்ஸ் படத்திலும் திருநங்கையாக நடித்திருந்தார்கள். அவர்களையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு சிம்பு செம பர்பாமன்ஸ் இந்த படத்தில் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.

சிம்புவுக்கு நடுவில் நிறைய பிரச்சனை மற்றும் கெட்ட பெயர் இருந்ததால் அவரால் தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுக்க முடியாமல் சினிமாவை விட்டு ஒதுக்கப்பட்டார். ஆனால் மாநாடு வெற்றிக்கு பிறகு தனது ரசிகர்களுக்காக கடுமையாக உழைத்து வருகிறார். இந்த வகையில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படமும் சிம்புக்கு வெற்றியை கொடுக்கும் என அவரது ரசிகர்கள் நம்புகின்றனர்.

Also Read : சிம்பு, ஆர்ஜே பாலாஜியால் நொந்து போன ப்ரொடியூசர்.. பெருமைக்கு குதிரை ஓட்டின கதை தான்

Trending News