திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

டி ராஜேந்தரால் மோசமான பெயர் வாங்கும் சிம்பு.. நாலாபக்கமும் இருந்து விழும் அடி

மாநாடு படத்திற்குப் பிறகு கம்பர் கொடுத்திருக்கும் சிம்புவுக்கு பல பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இதனால் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் வெந்து தணிந்தது காடு படத்திற்குப் பிறகு, சிம்பு பத்து தல, கொரோனா குமாரு ஆகிய படங்களில் நடித்து வந்தார்.

தற்போது டி ராஜேந்தர் உடல்நிலை திரும்பி உள்ளதால் ஒரு மாதம் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதனால் சிம்பு படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளாமல் தனது தந்தையை பார்க்க திட்டமிட்டுள்ளார். இந்த முடிவால் சிம்பு அடுத்தடுத்து நடிக்கவிருக்கும் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஏற்கனவே சிம்பு, பத்து தல படப்பிடிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தந்தை டி ராஜேந்தருக்கு உயர் சிகிச்சைக்காக அவருடன் அமெரிக்கா சென்று கூடவே இருந்து பார்த்துக் கொண்ட நிலையில், பத்து தலை படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனால் படப்பிடிப்பிற்காக ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்தும் வேலைகளும் நாசமானது.

ஆகையால் பல கோடி ரூபாய் பணம் போட்டு படம் எடுத்த தயாரிப்பாளர்கள் சிம்புவை படத்தில் நடிக்கும்படி கூறியுள்ளனர். இதற்காக சிம்புவுக்கும் நல்ல யோசனை ஒன்றைக் கூறி வருகின்றனர். அதாவது படத்தில் நடித்துவிட்டு இரவு சென்று அவரை அப்பாவை பார்த்துக் கொள்ளும்படி கூறியுள்ளனர்.

ஏனென்றால் சிம்பு வராமல் போனால் அங்கு கேமராமேன், தொழில்நுட்ப கலைஞர்கள், இயக்குனர், சக கலைஞர்கள் ஆகியோர் படத்தில் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது, மேலும் அவர்கள் மற்ற படங்களில் நடித்து வரும் சூழ்நிலை இருப்பதால் சிம்புவால் மற்ற கலைஞர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனக் கூறுகின்றனர்.

ஏற்கனவே சிம்பு சரியான நேரத்திற்கு படப்பிடிப்பு தளத்திற்கு வர மாட்டார் என்ற கெட்ட பெயரை வாங்கிக் கொண்டிருந்த நிலைமை மாறி தற்போது பொறுப்புள்ள சிம்புவாக வேறமாதிரி என்ட்ரி கொடுத்திருக்கிறார் என நினைத்துக் கொண்டிருக்கும்போது, தந்தைக்காக இப்படியெல்லாம் படப்பிடிப்பை தள்ளி போடுவதால் அவருக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி இருக்கிறது.

Trending News