வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

தொட்டதெல்லாம் துலங்காமல் அவஸ்தை பட்டு வரும் சிம்பு.. படத்திலும் ரியலிலும் ஜீரோவான STR

Simbu: ஏகப்பட்ட பிரச்சனைகளில் சிக்கித் தவித்து வந்த சிம்பு இப்போதுதான் ஓரளவுக்கு எல்லாத்தையும் மூட்டை முடிச்சு கட்டிக்கிட்டு நல்ல பிள்ளையாக நடித்து வந்தார். அதற்கேற்ற மாதிரி இவருடைய உடம்பையும் கஷ்டப்பட்டு குறைத்து மீண்டும் ஹீரோ மாதிரி கம்பேக் கொடுத்தார். அதனால் தான் மாநாடு, வெந்து தணிந்தது காடு, மற்றும் பத்து தல ஆகிய படங்கள் மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கைக்கு எட்டி வாய்க்கு எட்டாத தூரத்துக்கு போய்விட்டது. அதனால் எப்படியாவது ஒரு வரலாற்றுப் படத்தில் நடித்தாக வேண்டும் என்ற காரணத்திற்காக தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கமல் தயாரிப்பில் ஒரு பீரியட் படத்தில் நடிப்பதற்கு ஒத்துக் கொண்டார். ஆனால் கிட்டத்தட்ட இந்த அறிவிப்பு வந்து ஒரு வருடம் ஆகிவிட்டது.

இன்னும் படத்தை ஆரம்பித்த பாடாக இல்லை. இதுல வேற பாகுபலி மாதிரி படத்தை எடுக்கப் போகிறோம் என்று சொல்லி இப்ப வர எந்தவித அப்டேட்டையும் கொடுக்கவில்லை. தற்போது சிம்பு எங்கே என்ன பண்ணிக் கொண்டிருக்கிறார் என்பது கூட தெரியவில்லை. இதற்கு இடையில் ஒரு பக்கம் இந்த படம் ட்ராப் ஆகிவிட்டது என்றும் சொல்கிறார்கள்.

Also read: கனத்த இதயத்தோட வந்த சிம்பு.. பவதாரணி மரணத்துக்கு இரங்கல் கூட தெரிவிக்காத அரக்க மனம் படைத்த ஹீரோக்கள்

அப்படி சொல்லிய பொழுதும் அதற்கு யாரும் எந்தவித ரியாக்ஷனும் கூட கொடுக்கவில்லை. கமலும் எந்தவித பதிலும் சொல்லாமல் மௌனம் காத்து வருகிறார். தற்போது சிம்பு நடிப்பதில் முழு கவனத்தையும் செலுத்தி வந்தாலும் கமல் இந்த மாதிரி இழுத்து அடித்து வருகிறார். ஒருவேளை கமலின் இரண்டு மகள்கள் கடன் வாங்கி எந்த படத்தையும் பண்ணக்கூடாது என்று வீட்டில் ஒரு பஞ்சாயத்தை ஏற்படுத்தி பிரச்சனை செய்தார்கள்.

அதனால் கூட சிம்பு படத்திற்கு ரொம்ப மெனக்கீடு எடுக்காமல் ஒதுங்கலாம் என்று முடிவு எடுத்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இதற்கிடையில் நிறைய படங்கள் மூலம் புதுப்புது ஹீரோக்கள் வந்து விட்டார்கள். இதையெல்லாம் பார்க்கும் பொழுது இனி புதுசா வருகிற ஹீரோ கூட தான் போட்டி போடணும் போல, அந்த அளவுக்கு தான் சிம்புவின் நிலைமை இருக்கிறது.

இப்படி சிம்பு தொட்டதெல்லாம் துவங்க முடியாமல் கெட்ட நேரம் ஆட்டிப் படைக்கிறது. இதுல வேற சிம்புவுக்கு மேரேஜ் பண்ண முடியல என்று இவருடைய அப்பா மிகவும் வருத்தத்தில் இருக்கிறார். பாவம் அவருக்கும் தன் பையனுக்கு கல்யாணத்த பண்ணி வச்சு பேரன், பேத்தியோட விளையாட வேண்டும் என்று ஆசை இருக்கும்ல. ஆனா தற்போது சிம்பு எல்லாத்துலயும் ஜீரோ என்கிற மாதிரி தான் பின்னோக்கி போய்க்கொண்டு இருக்கிறார்.

Also read: அடுத்த வருடம் ஆக்ஷன் படமாக களமிறங்க போகும் 5 படங்கள்.. கீரியும் பாம்புமாக நிற்கப்போகும் சிம்பு தனுஷ்

Trending News