தன்னுடைய இரண்டாவது வயதில் குழந்தை நட்சத்திரமாக உறவை காத்த கிளி படத்தில் நடிக்க ஆரம்பித்தவர், அடுத்தடுத்து எங்க வீட்டு வேலன், பெற்றால் தான் பிள்ளையா, சபாஷ் பாபு என சிறுவயதிலிருந்து நடிக்க கற்றுக்கொண்டு சினிமாவில் பல திறமைகளை வளர்த்துக் கொண்டார்.
ஆனால் சில நேரங்களில் அவர் சினிமாவை பார்த்த விதம் அவரை அதளபாதாளத்துக்கு தள்ளியது. இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களிடம் சரியான அணுகுமுறை இல்லாமல் இடையில் இவரது கேரியர் கேள்விக்குறியானது. அதிலிருந்து இப்பொழுது முழுமையாக மீண்டும் விட்டார்.
சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாடிய சிம்பு அடுத்தடுத்து தான் நடிக்கவிருக்கும் மூன்று படங்களின் அறிவிப்பை கொடுத்து அசத்தினார். சிம்பு வேண்டாம் என ஒதுக்கியவர்கள் எல்லோரும் இப்பொழுது திருந்திய சிம்புவை அணுகி வருகிறார்கள். மணிரத்தினத்தின் தக்லைப் படம் அடுத்து இவருக்கு ரிலீஸ் ஆகிறது.
அறிவித்த மூன்று படங்களில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நின்று போன STR48 படமும் ஒன்று. ஏற்கனவே 150 கோடிகள் என பயந்து ராஜ்கமல் நிறுவனம் இந்த படத்தை நிராகரித்தது. இப்பொழுது சிம்புவே இதை தயாரிக்கவும் உள்ளார். இதற்காக “அட்மன் சினி ஆர்ட்ஸ்” என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
புலிக்கு பிறந்தது பூனை இல்லை என அவரது தந்தை டி ராஜேந்தரை நியாபகப்படுத்தி உள்ளார். முதல் படமே 150 கோடிகள் என்றால் இவரின் அசாத்திய தைரியமும், நம்பிக்கையும் பாராட்டக்கூடியதுதான். இதுவரை பம்மிய சிம்பு இப்பொழுது பாய்வதற்கு தயாராகி விட்டார்.