வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

உலக நாயகன் இருக்கும் இடத்தில் சிம்புக்கு கிடைத்த ராஜ மரியாதை.. உண்மை என்னன்னு தெரியுமா.?

Simbu and Kamal: சில பேரை ஏன் பிடிக்குது எதற்கு பிடிக்கிறது என்று காரணமே தெரியாத அளவிற்கு அவர்கள் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு விடும். அது போல தான் நடிகர் சிம்புக்கு என்று எக்கச்சக்கமான ரசிகர்கள் குவிந்து இருக்கிறார்கள். ஆனால் இவர் மற்ற நடிகர்களைப் போல அடுத்தடுத்து படங்களை கொடுத்து வெற்றியடையும் நடிகர் அல்ல.

வருசத்துக்கு ஒரு படத்தை கொடுப்பதே சிம்புவுக்கு குதிரைக்கொம்பாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் இவருடைய படங்களுக்கு ரசிகர்கள் அதிக வரவேற்பை கொடுத்து வருகிறார்கள். அப்படிப்பட்ட சிம்பு கடைசியாக நடித்த பத்து தல படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் சிம்பு நடிப்பு அனைவரையும் கவர்ந்து விட்டது என்றே சொல்லலாம்.

டாப் கியரில் ஜொலிக்கும் சிம்பு

இதனைத் தொடர்ந்து அடுத்த படத்திற்கு கமல் தயாரிப்பில் கூட்டணி வைத்தது அப்படியே டிராப் ஆகிவிட்டது. அதனால் இவரை சமரசம் செய்யும் வகையில் கமல் மணிரத்தினம் இயக்கத்தில் நடிக்கும் தக்லைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தை கொடுத்து விட்டார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக த்ரிஷா மற்றும் ஜெயம் ரவி, துல்கர் சல்மா மற்றும் பல நடிகர்கள் இணைந்து இருக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அடுத்த வருடம் அனைத்து திரையரங்களிலும் தக் லைஃப் படம் வெற்றிநடை போடப் போகிறது. இதற்கிடையில் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துள்ள இந்தியன் 2 படம் அடுத்த மாதம் 12ஆம் தேதி வெளிவர இருக்கிறது. அந்த வகையில் இந்தியன் 2 படத்தின் பிரமோஷன் வேலைகள் அனைத்தும் நடைபெற்று வருகிறது.

இது சம்பந்தமாக சமீபத்தில் ஒரு விழா நடைபெற்ற பொழுது அதில் கமல் மற்றும் இந்தியன் 2 படக்குழு அனைவரும் கலந்து கொண்டார்கள். அப்பொழுது அதில் சிம்புவும் நுழைந்தபொழுது யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு அவருக்கு கிடைத்த வரவேற்பு கைதட்டலை பார்க்கும்பொழுது ரொம்பவே பிரமிக்க வைத்திருக்கிறது.

இன்னும் சொல்ல போனால் கமல் கூட இந்த அளவிற்கு ஒரு வரவேற்பை எதிர்பார்த்து இருக்கவில்லை. அந்த அளவிற்கு இவருக்கு கிடைத்த மரியாதை விட ராஜா மரியாதை சிம்புவுக்கு கிடைத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி விட்டது. இதனை எதிர்பார்க்காத சிம்புவே பூரித்து போய் இருக்கிறார்.

இதனை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் சிம்பு மீது ஏற்பட்டுள்ள சர்ச்சைகளை நீக்கி தொடர்ந்து நல்ல கதைகளை தேர்வு செய்து எந்த பிரச்சனையிலையும் சிக்கிக் கொள்ளாத அளவிற்கு இருந்தால் ரசிகர்கள் சிம்புக்கு இன்னும் ஏகபோக வரவேற்புகளை கொடுத்து வரவேற்பார்கள். அப்படி மட்டும் சிம்பு நடிப்பில் கவனம் செலுத்தி அவருடைய கேரியரை டாப் கியரில் கொண்டு வந்து விட்டால் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து விடுவார்.

கமல் மற்றும் சிம்பு கூட்டணி

- Advertisement -spot_img

Trending News