செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 17, 2024

சிவகார்த்திகேயன் மறுத்தவுடன் தொக்கா தூக்கிய சிம்பு.. சிங்கப்பூரை தெறிக்கவிட்ட எஸ் டி ஆர்

யுவன் உடன் சேர்ந்து சிங்கப்பூரில் மியூசிக் கான்செர்ட்டில் கலந்து கொண்டிருக்கிறார் சிம்பு.. அந்த நிகழ்ச்சியில் ஆறு பாடல்கள் பாடியுள்ளார். அத்தனையும் ஆடியன்ஸ் கூட்டத்தையே எழுந்து ஆடச் செய்ததாம். அந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க செம என்டர்டைன்மென்டாக இருந்து உள்ளது.

இதனால் அடுத்தடுத்து பல ஆல்பங்கள் பாடுவதற்கு சிம்புவிற்கு ஆஃபர் வருகிறதாம். சிம்பு சிங்கப்பூர் போனதிலிருந்து ஆளே மாறிவிட்டாராம். எல்லாமே செம டைமிங்கில் நடந்துள்ளது. இதற்கு காரணம் சிம்புவின் முழு ஒத்துழைப்புதான்.

இங்கே மணிரத்தினம் மற்றும் கமல் கூட்டணியில் தக்லைப் படத்தில் நடிக்க ஆரம்பத்தில் இருந்தே சிம்புவிடம் நிறைய மாற்றங்கள் தெரிந்து வருகிறதாம். சினிமாவில் அடுத்த கட்டத்திற்கு போக வேண்டும் என்பதைத்தான் இப்பொழுது முழுமூச்சில் செயல்படுத்தி வருகிறாராம்.

சமீப காலமாக சரியான படம் அமையாமல் மனக்குமுறல்களில் இருந்த அவருக்கு இப்பொழுது ஒரு படம் அமைந்துள்ளது. முன்னதாக பார்க்கிங் படம் எடுத்த இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன், சிவகார்த்திகேயனுக்கு ஏற்கனவே ஒரு கதை சொல்லி இருக்கிறார் ஆனால் சிவகார்த்திகேயன் இருக்கிற பிசியில் அதை ஒப்புக்கொள்ளவில்லை.

அதே நேரத்தில் சிம்புவிற்கும் ஒரு ஒன் லைன் ஸ்டோரி சொல்லி இருக்கிறார். அதைக் கேட்ட சிம்பு மிகவும் பிடித்துப் போகவே அந்த படத்தை டெவலப் பண்ண சொல்லி இருக்கிறார். இப்பொழுது ராம்குமார் படத்திற்கு ரெடியாகிவிட்டார் சிம்பு. தக்லைப் முடிந்த பிறகு சிம்பு நடிக்கப் போகும் படம் இதுதான்.

- Advertisement -

Trending News