திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

வேட்டையாடு விளையாடு ரீ-ரிலீஸ் பார்த்து பேராசையுடன் சிம்பு.. 18 வருடத்திற்கு பிறகு ரகடான படத்தை வெளியிடும் எஸ்டிஆர்

Actor Simbu Movie Re Release: சமீப காலமாகவே டாப் நடிகர்களின் படங்களை ரீ ரிலீஸ் செய்து கல்லா கட்டிக் கொண்டிருக்கின்றனர். அதுவும் உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ‘வேட்டையாடு விளையாடு’ படத்தை மறுபடியும் ரீலீஸ் செய்து கோடிகளில் வசூலை தட்டி தூக்கினர்.

இதன் வெற்றியால் வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுக்க பட குழு தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்த படம் மட்டுமல்ல இதன் தொடர்ச்சியாக ரீ ரிலீஸ் செய்யப்பட்ட சுப்ரமணியபுரம் படத்திருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையெல்லாம் பார்த்த இதைப் பார்த்து சிம்பு தன்னுடைய ரகடான படத்தை வெளியிடும் முடிவுக்கு வந்துள்ளார்.

Also Read: சந்தானத்தை ஓரங்கட்ட பார்த்த கவுண்டமணி.. சிம்பு கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்

சிம்பு நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான படம் தான் தொட்டி ஜெயா. அந்த காலகட்டத்தில் பெரிய வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. ஆனால் அந்த படத்திற்கு என்று ரசிகர்கள் அதிகம். அந்த படத்தை மீண்டும் வெளியிட்டு தற்போது உள்ள இளைஞர்களுக்கு படத்தை காண்பித்து எப்படி வரவேற்பு வருகிறது என்று பார்க்கப் போகிறார் சிம்பு.

அந்த வரவேற்பு பொறுத்து கண்டிப்பாக தொட்டி ஜெயா- 2 எடுக்க சிம்பு யோசனை கூறியுள்ளாராம். முக்கியமாக பத்து தல படத்தில் சிம்புவின் கதாபாத்திரம் அவருக்கு கச்சிதமாக பொருந்தியது. இந்த படமே தொட்டி ஜெயா மாதிரி தான் இருக்கிறது என்று கூறியதால் தான் சிம்பு ஆர்வமாக இருக்கிறார்.

Also Read: கமலுக்கு செய்யாத பிரம்மாண்டத்தை விஜய்க்கு செய்யும் லோகேஷ்.. கோவைக்கு படையெடுக்க போகும் தளபதி வெறியர்கள்

பத்து தல திரைப்படத்திற்கு ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்ததால், தொட்டி ஜெயா படத்தை ரீ ரிலீஸ் செய்தாலும் வசூலை அள்ளிவிடலாம் என்ற பேராசையில் தான் சிம்பு இப்படி ஒரு முடிவை எடுத்து இருக்கிறார். அது மட்டுமல்ல இந்த படத்தில் சிம்பு ரக்கட் பாயாக நடித்திருக்கிறார்.

இளசுகள் பெரும்பாலும் இப்படிப்பட்ட கதாபாத்திரங்களை தான் விரும்புகின்றனர். ஆகையால் 18 வருடத்திற்கு பிறகு தொட்டி ஜெயா படத்தையும் திரையரங்கில் கொண்டாடுவார்கள் என்று சிம்பு கனவு கோட்டை கட்டி இருக்கிறார். எனவே விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆகி எப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Also Read: வேட்டையாடு விளையாடு பார்த்து இன்று ரீ-ரிலீஸ் ஆன 10 படங்கள்.. பாபாவில் விட்டதை தட்டி தூக்க திட்டமிட்ட ரஜினி

Trending News