சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

40 வருடமாக செய்யாத புது முயற்சியை கையில் எடுத்த சிம்பு.. STR 48 படப்பிடிப்பு எப்போ தெரியுமா?

தன்னுடைய தந்தை டி ராஜேந்தரின் ‘உறவை காத்த கிளி’ என்ற படத்தில் ஒரு வயது குழந்தையாக அறிமுகமான சிம்பு, தமிழ் சினிமாவில் தான் தவழ்ந்து நடை பழகி தற்போது கதாநாயகனாக ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கிறார். இவருடைய மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து தன்னுடைய 48வது படத்தில் இதுவரை செய்யாத புது முயற்சியை கையில் எடுத்து மிரட்டி இருக்கிறார்.

இவர் இதுவரை ஏகப்பட்ட கேரக்டரில் விதவிதமான கதைகளத்தில் நடித்திருக்கிறார். ஆனால் இதுவரை ஒரு முறை கூட வரலாற்று சம்பந்தப்பட்ட படங்களில் நடிக்கவில்லை. ஆனால் STR 48 படத்தினை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி வரலாற்று பின்னணியில் படத்தின் முழு ஸ்கிரிப்ட்டையும் உருவாக்கி ரெடியாக வைத்திருக்கிறார்.

Also Read: இறுதி அஞ்சலி செலுத்த வராத கமல்.. கிளம்பிய எதிர்ப்பு, உண்மையான நண்பனாக செய்த கடைசி மரியாதை

ரத்தமும் போர்க்களமும் மிகுந்த இந்த படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இதுபோன்ற வரலாற்று சிறப்புமிக்க கதைக்களத்தில் சிம்பு முதல் முதலாக நடிப்பதால் நிச்சயம் வித்தியாசமான சிலம்பரசனை பார்க்க வாய்ப்பு இருக்கிறது. இதற்கு முன்பு மன்மதன், சிலம்பாட்டம் போன்ற படங்களில் இரட்டை வேடங்களில் சிம்பு நடித்து அசத்தினார்.

அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின்பு தற்போது மீண்டும் இரட்டைக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. STR 48 படத்திற்காகவே சிம்பு இரண்டு மாதங்களாக தாய்லாந்தில் தங்கி மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சி பெற்று வருகிறார். ஏனென்றால் இந்த படம் வரலாற்றுக் கதையம்சம் கொண்ட படமாக தயாராகுவதால் அதற்கு இந்த பயிற்சி அவசியமான ஒன்றாகும்.

Also Read: அந்த நடிகைக்காக தலைகீழாக நிற்கும் சிம்பு.. ஹீரோயின் தேடும் படலத்தில் இறங்கிய கமல்

இந்த படத்தை சுமார் 100 கோடி பட்ஜெட்டில் மிகப்பிரமாண்டமாக கமலின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் எடுக்க திட்டமிட்டுள்ளனர். மேலும் இந்த படத்தின் பிரீ ப்ரொடக்ஷன் பணிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு துவங்கியது.

அந்தப் பணிகள் முடியவே இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும். ஆகையால் அவற்றை முடித்த பின்பு வருகிற ஆகஸ்ட் மாதத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பை துவங்க உள்ளனர். மேலும் இந்த படத்தில் சிம்புவுக்கு கதாநாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் இடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

Also Read: மாநாடு பட வெற்றிக்கு வெங்கட் பிரபுவை விட இவர் தான் காரணமாம்.. தளபதி-68 தலை தப்புமா!

- Advertisement -spot_img

Trending News