சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

சிம்பு லயன் அப்பில் இருக்கும் 3 படங்கள்.. மாஸாக உருவாகும் STR 50

Simbu : சினிமாவில் குழந்தை நட்சத்திரமாகவே அறிமுகமானவர்தான் நடிகர் சிம்பு. ஆனால் அவருக்குப் பின்னால் வந்த நடிகர்கள் எல்லாம் இப்போது 100 படங்களையே நெருங்கி இருக்கின்றனர். ஆனால் சிம்பு தற்போது வரை ஐம்பதாவது படத்தை இன்னும் தொடங்கவில்லை.

மாநாடு படத்தில் மூலம் செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கிய சிம்பு இப்போது நின்று நிதானமாக தனது அடுத்தடுத்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் சிம்புவின் கைவசம் இப்போது மூன்று படங்கள் வரிசை கட்டி இருக்கிறது.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் தக் லைஃப் படத்தில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில் அவரது கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படும் என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது படத்தை இயக்க உள்ளார் அஸ்வத் மாரிமுத்து.

சிம்பு கைவசம் இருக்கும் மூன்று படங்கள்

இவர் இதற்கு முன்னதாக தமிழில் ஓ மை கடவுளே படத்தை இயக்கி இருந்தார். இப்போது பிரதீப் ரங்கநாதனை வைத்தே டிராகன் என்ற படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கிறது.

டிராகன் படப்பிடிப்பு முடிந்தவுடன் சிம்புவை வைத்து படப்பிடிப்பு நடத்த இருக்கிறார். அடுத்ததாக ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படம் தான் சிம்புவின் ஐம்பதாவது படம். இந்த படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார். பெரிய நடிகர்களின் ஐம்பதாவது படம் மிகவும் கவனிக்கப்படும்.

அவ்வாறு சிம்புவின் ஐம்பதாவது படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது. இந்த படத்திற்கான பெரும்பாலான படப்பிடிப்பு துபாயில் தான் நடக்க இருக்கிறதாம். மேலும் விரைவில் இந்த படம் குறித்து அப்டேட் வெளியாக இருக்கிறது.

மீண்டும் கலக்க வரும் சிம்பு

Trending News