ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

அண்ணன், தம்பியாக இரட்டை வேடத்தில் முட்டி மோத உள்ள சிம்பு.. STR 48 படத்தின் கதை இதுதான்!

STR 48 Movie Update: பத்து தல படத்திற்கு பிறகு சிம்பு அடுத்ததாக கமலஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் STR 48 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை குறித்த முழு அப்டேட் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பேசப்படுகிறது.

இதில் சிம்பு அண்ணன், தம்பி இரட்டை வேடத்தில் ஹீரோ மற்றும் வில்லனாகவும் முட்டி மோத போகிறார். அரியனுக்காக போராடும் சகோதரர்களின் கதைதான் இந்த படத்தின் மையக்கரு. ஏற்கனவே சிம்பு அண்ணன் தம்பியாக மன்மதன் என்ற படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஆனால் அந்த படத்தில் அண்ணன் தம்பிகள் பாசமாக இருப்பார்கள். இந்தப் படத்தில் அண்ணன் தம்பி இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் எதிரிகளாக இருப்பார்களாம்.

Also Read: சிம்பு படத்திற்கு முட்டுக்கட்டை போட்ட தயாரிப்பாளர்.. ஆண்டவரால் ஏற்பட்ட விடிவுகாலம்

இரண்டு கதாபாத்திரத்தில் சிம்பு இந்த படத்தில் நடிப்பதால் இரண்டு வித்தியாசமான மாற்றங்களை செய்யப் போகிறார். இந்த படத்திற்காகவே சிம்பு கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்பு இருந்த ஸ்லிம்மான லுக்கில் மாறி இருக்கிறார் இவருடைய சமீபத்திய புகைப்படமும் ரசிகர்களிடம் வைரலாகப் பரவியது.

இதெல்லாம் STR 48 படத்திற்கான கெட்டப் என்பதால் படமும் எதிர்பார்த்ததை விட வித்தியாசமாகவே இருக்கப்போகிறது மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் முதல் வாரத்தில் கிக்ஸ்டார்ட் செய்யப் போகின்றனர். மேலும் இந்த படத்தின் பிரீ ப்ரொடக்ஷன் வேலைகள் அதிக நேரம் எடுக்கும்.

Also Read: ஏழு மாதங்களாக ஏங்கி கிடக்கும் சிம்பு.. செகண்ட் இன்னிங்ஸ் கேரியருக்கு வரப் போகும் பெரிய ஆபத்து

அதனால் இப்போது அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை எஸ்டிஆர் நடிப்பில் வெளியான படங்களில் இந்தப் படம் தான் அதிக பட்ஜெட்டில் பிரமாண்டமாக எடுக்கக்கூடிய படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்ல இந்த படத்தில் சிம்பு மற்றும் ஏஆர் ரகுமான் இருவரும் 6-வது முறையாக STR 48 படத்தில் இணையபோகின்றனர்.

ஆகையால் பாடல்களும் படத்தின் பிரம்மாண்டத்திற்கு ஏற்றவாறு அதிரடியாக இருக்கப் போகிறது. நாளுக்கு நாள் சிம்பு 48 படத்தை குறித்த சுவாரசியமான அப்டேட் வெளியாகி இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கின்றனர். அதிலும் STR 48 படத்தின் கதையை குறித்த இந்த தகவல் சிம்பு ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தி இருக்கிறது.

Also Read: ரெட் கார்ட்டுக்கு பயந்து இறங்கி வந்த சிம்பு.. சாமர்த்தியமாய் பணிய வைத்த தயாரிப்பாளர்

Trending News