ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

அதீத மன குழப்பத்தில் சிம்பு.. கங்காரு போல் தேசிங்கு பெரிய சாமியை தூக்கிட்டு அலைந்தும் பிரயோஜனம் இல்லை

எஸ் டி ஆர் 48 சிம்பு நடிக்க, தேசிங்கு பெரியசாமி இயக்குவதாக இருந்தது. இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்தது. இந்த படத்திற்காக சிம்பு ஒரு வருடம் தவம் கிடந்தார். இதற்காக நீண்ட தலை முடியை வளர்த்துக்கொண்டு சுற்றி திரிந்தார். இருந்தாலும் இந்த படம் இன்று வரை கைகூடி வரவில்லை.

தேசிங்கு பெரியசாமி இந்த படத்திற்கு 150 கோடி பட்ஜெட் நிர்ணயித்தார். அதற்கு குறைந்து எடுத்தால் இந்த படம் நன்றாக இருக்காது எனவும் திட்டவட்டமாய் கமலிடம் கூறி வந்தார். ஆனால் கமல்லின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் பட்ஜெட்டை குறைத்தால் தான் இந்த படம் என விடாப்பிடியாக நின்றது.

ஒரு கட்டத்துக்கு மேல் கமல் இவ்வளவு பட்ஜெட்டில் படம் பண்ண முடியாது என கை விரித்துவிட்டார். அதனால் ஒரு வருடம் காத்துக் கிடந்த பின்பு என்ன செய்வது என ஒரு கட்டத்துக்கு மேல் தானே இந்த படத்தை தயாரிக்கவும் முன்வந்தார். 150 கோடி இல்லாததால் துபாய் சென்று கண்ணன் ரவி என்ற பைனான்சியரை பார்த்து இதற்கு ஒப்புதல் வாங்கினார்.

ஆனால் இப்பொழுது கண்ணன் ரவியும் இழுத்து அடிப்பதால் பெரிய மன குழப்பத்தில் இருந்து வருகிறார் சிம்பு. தக் லைப் படம் அவருக்கு 49 வது படம் எப்படியும் 50-வது படத்தை தேசிங்கு பெரியசாமி தான் இயக்க வேண்டும் என காத்திருந்த அவருக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. இதனால் அடுத்த ஐம்பதாவது படத்தை அவரே இயக்க உள்ளார்.

ஏற்கனவே அவரின் சக போட்டியாளர் தனுஷ் அடுத்தடுத்து படங்கள் இயக்குவதால் இவருக்கும் கொஞ்ச நாட்களாகவே அந்த ஆசை துளிர் விட்டு வருகிறது. இப்பொழுது படங்களை இயக்குவதிலும் களமிறங்க உள்ளார் சிம்பு. அவரின் ஐம்பதாவது படம் மன்மதன் 2 படமாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.

Trending News