ஒரு காலத்தில் சிம்புவா? என யோசித்த அனைவருமே தற்போது நம்ம பையன் சிம்பு என நினைக்குமளவுக்கு தன்னுடைய நடவடிக்கைகளை முற்றிலும் மாற்றி தொடர்ந்து பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் வருகின்ற பொங்கலுக்கு சிம்பு நடிப்பில் ஈஸ்வரன் படம் வெளியாக உள்ளது. மேலும் ஈஸ்வரன் படத்துடன் சிம்புவின் அடுத்த படமான மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாக உள்ளது என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
மேலும் சிம்புவின் பிறந்தநாளான பிப்ரவரி 3ஆம் தேதி மாநாடு படத்தின் டீசர் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். நீ நிலையில் அடுத்தடுத்து சிம்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
ஈஸ்வரன் படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் தான் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் மாநாடு. தற்போது மாநாடு படத்தை ரிலீஸ் தேதியை படக்குழுவினர் குறித்து விட்டார்களாம்.
வருகின்ற ரம்ஜானுக்கு மாநாடு படம் வெளியாக இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மாநாடு படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற முஸ்லிம் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனால் முஸ்லிம் பண்டிகையான ரம்ஜானுக்கு படத்தை களமிறங்கினால் சரியாக இருக்கும் என படக்குழுவினர் முடிவு செய்து இந்த தேதியை குறித்து வைத்துள்ளார்களாம். இருந்தாலும் இனி வரும் நாட்களில் ரிலீஸ் தேதியில் மாறுதல் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.