வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சில்லியான காரணத்தை சொல்லி கௌதம் மேனனை அசிங்கப்படுத்தும் சிம்பு.. இரு துருவங்களாக முட்டி மோதும் நிலை

Actor Simbu and Director Gautham Menon: ஆரம்பத்தில் சிம்புவிற்கு நல்ல மார்க்கெட் இருந்திருந்தாலும் போகப் போக சராசரியான வரவேற்பை பெற்று ரசிகர்களிடையே பல சர்ச்சைகளில் சிக்கி பெயரைக் கெடுத்துக் கொண்டார். இவருடைய ராசி எப்படியானது என்றால் ஐந்து படங்களில் நடித்தால் அதில் ஏதாவது ஒரு படம் மட்டுமே வெற்றி பெறக் கூடியதாக அமையும்.

அதில் இவரை அதிகமாக ரசித்து கொண்டாடப்பட்ட படம் என்றால் அது கெளதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா படம் தான். எப்பொழுது இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரும் என்று ஆவலாக காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு தொடர்ந்து ஏமாற்றமாகத்தான் அமைகிறது.

Also read: ரீமேக் என்ற பெயரில் படும் மொக்கை வாங்கிய 5 படங்கள்.. சிம்புவால் காணாமல் போன தயாரிப்பாளர்

ஆனால் அதற்கு பதிலாக இவர்கள் கூட்டணியில் வெந்து தணிந்தது காடு படம் வெளிவந்தது. இதன் பிறகு என்னவோ தெரியலை இவர்கள் இருவருக்கும் எந்த விதத்திலும் ஒத்துப் போகவில்லை என்றே சொல்லலாம். அதிலும் சிம்புவுக்கு, கௌதம் என்றாலே எரிச்சலாகவும் அவர் வேண்டாம் என்று ஒதுக்கும் அளவிற்கு நினைக்கிறார்.

ஆனால் சில்லியான ஒரு காரணத்தை சொல்லுவது தான் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு இருக்கிறது. ஏனென்றால் கௌதம் மேனன், சிம்புவின் குரு என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இவருக்கு வெற்றி படத்தை கொடுத்திருக்கிறார். என்ன காரணம் என்றால் கௌதம் மேனன் சிம்புவை ட்ரீட் பண்ற விதம் அவருக்கு சுத்தமாக பிடிக்கவே இல்லையாம்.

Also read: சிம்புவுடன் கைகோர்க்கும் எஸ்.ஜே சூர்யா.. பல வருஷத்துக்கு முன்னாடி பண்ண வேண்டிய படம் இப்ப பண்ண போறாங்க.!

படபிடிப்பின் போது தகுந்த மரியாதை கொடுக்காமல் நடத்துவது, இவரிடம் கதை சொல்லும் போது ஒரு விதமாகவும், படம் எடுக்கும்போது அந்த காட்சியை இல்லாத மாதிரி கௌதம் செய்வது சிம்புவிற்கு மனக்கசப்பு ஏற்பட்டு விட்டிருக்கிறது. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் கூட பல காட்சிகளை நீக்கி இருக்கிறார்.

அதுபோக வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்புவிடம் மூன்று சண்டை காட்சிகள் இருக்கிறது என்று கூறி, அது எதுவுமே இல்லாத போல் அவரை ஏமாற்றி இருக்கிறாராம். இப்படி சில்லியான காரணத்தை கௌதம் மேலே அடுக்கிக் கொண்டு அவரை அசிங்கப்படுத்தி வருகிறார் சிம்பு. அதனால் தற்போது சிம்பு மற்றும் கௌதம் மேனன் இரு துருவங்களாக மாறியதால் இனி விண்ணைத்தாண்டி வருவாயா 2 படம் வருவது சந்தேகம் தான்.

Also read: துருவ நட்சத்திரம் பார்க்க கௌதம் மேனன் கூறும் 3 முக்கிய விஷயங்கள்.. பல வருட எதிர்பார்ப்பு புது ஸ்டைலில் வரும் விக்ரம்

Trending News