Simbu: இள இரத்தம் கொஞ்சம் சூடாகத்தான் இருக்கும் என்று சொல்வார்கள் அது சிம்பு விஷயத்தில் சரியாகவே இருக்கிறது. எந்த நேரத்தில் என்ன பண்ணனும், எப்படி இருந்தால் கேரியரை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று சூட்சமம் எதுவும் தெரியாமல் கிடைக்கிற வாய்ப்பை சொதப்பி விடுகிறார். அதாவது கடந்த வருடம் சுதா கொங்கரா இயக்கத்தில் ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தின் கூட்டணியுடன் சிம்பு படம் நடிக்கப் போகிறார் என்று பேச்சுக்கள் அடிபட்டது.
ஆனால் அது தற்போது வெறும் பேச்சாகவே முடிந்து விட்டது. அதற்கு காரணம் சிம்புவின் அசால்ட்தனமான விஷயங்கள் தான். அதாவது சுதா கொங்கரா கிட்டத்தட்ட இவருடைய கால் சீட்டுக்காக பல மாதங்களாக காத்துக் கொண்டிருந்தார். ஆனால் இவரோ தயாரிப்பாளரிடம் அதிகமாக சம்பளத்தை கேட்டு டிமாண்ட் செய்து இருக்கிறார்.
இவர் கேட்ட சம்பளத்தை எப்படியாவது குறைத்து படத்தை முடித்து விட வேண்டும் என்று தயாரிப்பாளர் அவருடைய சைடிலிருந்து பல பேச்சு வார்த்தைகளை வைத்திருக்கிறார். ஆனால் எதற்குமே ஒத்து வராத சிம்பு கடைசி வரை சரியான பதிலை சொல்லவில்லை. இதனால் இனியும் இவரை நம்பி இருந்தால் வேலைக்கு ஆகாது என்று சுதா கொங்கரா சூர்யாவை வைத்து படம் எடுப்பதற்கு தயாராகி விட்டார்.
அதே மாதிரி ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனமும் சிம்புவின் செயலால் கடுப்பாகி இந்த ப்ராஜெக்ட்டை அப்படியே டிராப் பண்ணிவிட்டார். ஆக மொத்தத்தில் நல்ல ஒரு ப்ராஜெக்டை சிம்பு கைநழுவ விட்டுவிட்டார். சுதா கொங்கரா படத்தில் சிம்பு நடித்தால் கண்டிப்பாக அவருடைய கேரியருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்திருக்கும்.
ஆனால் எதையுமே யோசிக்காமல் கிடைத்த வாய்ப்பை கை நழுவ விட்டுவிட்டார். அது மட்டும் இல்லாமல் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கடந்த 10 மாதத்திற்கு முன் நடிக்கப் போவதாக அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் இன்னும் வரை சூட்டிங் ஆரம்பிக்காமல் இழுத்தடித்துக் கொண்டு இருக்கிறது.
இப்படியே போனால் கூடிய விரைவில் சிம்புவுக்கு பட வாய்ப்பு எதுவும் இல்லாமல் கேரியரை க்ளோஸ் ஆகிவிடும் நிலைமைக்கு போய்விடும். அந்த வகையில் தற்போது கமிட் ஆகி உள்ள படம் எப்படியும் ரிலீஸ் ஆவதற்கு இரண்டு வருடங்கள் ஆகும் போல தெரிகிறது. இப்போது இருக்கும் போட்டிக்கு நடுவில் சிம்பு பிழைக்க தெரியாமல் கிடைக்கிற வாய்ப்புகளை அஜாக்கிரதையால் மிஸ் பண்ணி வருகிறார்.
Also read: விஷால், சிம்புக்கு எல்லாருக்கும் குருவே அந்த ஹீரோ தான்.. அரசனை நம்பி புருசனை கைவிட்ட சோக கதை