புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பிளாப் இயக்குனரை தூக்கிவிட கைகோர்க்கும் சிம்பு.. அப்படினா சர்ச்சைக்கு பஞ்சமே இருக்காது!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படம் சிம்புக்கு மிகப் பெரிய கம்பேக் கொடுத்த நிலையில் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. கௌதம் வாசுதேவ் மேனனின் வெந்து தணிந்தது காடு, பத்துதல போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

சமீபத்தில் சிம்புவின் தந்தை டி ஆரின் உடல் நிலை குறைவு காரணமாக வெந்து தணிந்தது காடு படத்தின் டீசர் வெளியீட்டு விழா தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இந்நிலையில் விரைவில் இப்படம் வெளியாக உள்ளது. தற்போது சிம்புவின் அடுத்த படத்திற்கான அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது இயக்குனர் முருகதாஸ் உடன் சிம்பு இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை தைரியமாக தனது படங்கள் மூலம் எடுக்கக்கூடியவர் ஏஆர் முருகதாஸ். தளபதி விஜய்க்கு துப்பாக்கி, கத்தி, சர்க்கார் என தொடர் வெற்றி படங்களை முருகதாஸ் தந்துள்ளார்.

இந்நிலையில் கடைசியாக ரஜினியின் தர்பார் படத்தை முருகதாஸ் இயக்கி இருந்தார். ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதனால் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக முருகதாஸ் படங்கள் எதுவும் இயக்காமல் இருந்தார். சமீபத்தில் பாலிவுட்டில் முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது.

ஆனால் தற்போது முருகதாஸ் சிம்புவிடம் ஒரு கதை கூறியுள்ளார். சிம்புக்கு இந்த கதை பிடித்து விட்டதால் உடனே ஓகே சொல்லிவிட்டாராம். இந்த படத்தின் கதை அரசியலை வைத்து மக்களை எவ்வாறு முட்டாள் ஆக்குகிறார்கள் என்பதையும், அரசியல்வாதி ஆவதற்காக அவர்கள் எந்த எல்லைக்கும் செல்கிறார்கள் என்பதை முருகதாஸ் படமாக எடுக்கயுள்ளார்.

ஏற்கனவே முருகதாஸின் படங்கள் பல சர்ச்சைக்கு பின்புதான் வெளியாகும். அந்த வகையில் தற்போது அரசியலை கையில் எடுத்திருப்பதால் இது மிகப்பெரிய பிரச்சனையில் சிக்க வாய்ப்புள்ளது. ஆனாலும் சிம்பு இப்படத்தின் கதையை கேட்டு சம்மதித்துள்ளார்.

ஏற்கனவே சிம்புவின் மாநாடு படம் வெளியாவதில் மிகப்பெரிய சிக்கல் சந்தித்த நிலையில் மீண்டும் சர்ச்சையான படத்தை ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் கிட்டதட்ட முருகதாஸ், சிம்பு கூட்டணி படம் உறுதி ஆகிவிட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Trending News