2011 ஆம் ஆண்டு கேவி ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் தான் கோ. ஆயுத எழுத்து படத்திற்கு பிறகு இளைஞர்களும் அரசியலுக்கு வரவேண்டும் என்பதை அழுத்தமாகச் சொன்ன திரைப்படம்.
கமர்ஷியல் அம்சங்களுடன் வெளியான இந்த திரைப்படம் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. அன்றைய தேதியிலேயே இந்த படம் கிட்டத்தட்ட 50 கோடி வசூல் செய்ததாக செய்திகள் வெளிவந்தன.
இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக முன்னாள் நடிகை ராதாவின் மூத்த மகள் கார்த்திகா நடித்திருந்தார். அவருக்கு இதுதான் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகை பியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
![simbu-ko-movie](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/05/simbu-ko-movie.jpg)
அவர்களைத் தொடர்ந்து அஜ்மல், ஜெகன் போன்றோரும் நடித்திருந்தனர். அன்றைய காலத்தில் இளைஞர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்திய படமாகவும் இந்தப்படம் மாறியது.
![simbu-ko-movie-01](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/05/simbu-ko-movie-01.jpg)
கோ படத்தில் ஜீவாவுக்கு பதிலாக முதல் முதலில் சிம்பு நடிக்க இருந்தார் என்ற செய்தியை கே வி ஆனந்த் பல பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார். சில நாட்கள் கோ படத்தில் நடித்த சிம்பு பின்னர் தயாரிப்பாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த படத்திலிருந்து விலகி விட்டாராம்.
![simbu-ko-movie-02](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/05/simbu-ko-movie-02.jpg)
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் கோ படத்தில் சிம்பு நடித்த புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன. சிம்பு பார்ப்பதற்கு செம ஸ்மார்ட்டாக இருக்கிறார். பேசாமல் சிம்புவே அந்த படத்தில் நடித்திருந்தால் இன்று இழந்த தன் மார்க்கெட்டை பிடிக்க போராட வேண்டிய அவசியமில்லை என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.