தமிழ் சினிமாவில் வம்பு நடிகர் என்ற பெயரைக் கொண்ட சிம்பு சமீப காலமாக நல்ல நடிகராக மாறியுள்ளது தயாரிப்பாளர்கள் மத்தியில் அவர் மீதான மரியாதையை இன்னும் அதிகரித்துள்ளது என்று சொல்லலாம்.
வருகின்ற பொங்கலுக்கு சிம்பு, நிதி அகர்வால் நடிப்பில் ஈஸ்வரன் படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை சுசீந்திரன் இயக்கியுள்ளார். மேலும் பாரதிராஜா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. வருகின்ற பொங்கலுக்கு மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பிப்ரவரி 3ஆம் தேதி சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு டீசர் என மாநாடு படக்குழு பரபரப்பாக வேலை செய்து வருகிறது.
இதற்கிடையில் சமீபகாலமாக சாமியாராக சிம்பு மாறிவிட்டாரா என்ற சந்தேகம் அனைவர் மத்தியிலும் இருந்து வருகிறது. அதற்கு காரணம் தவறாமல் தினமும் ஈஸ்வரனை வழிபட்டு வருகிறாராம்.
மேலும் சமீபத்தில் கூட சபரிமலைக்கு மாலை போட்டு சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மீண்டும் காசியிலுள்ள ஈஸ்வரனை பார்க்க தனது நண்பர் மகத் என்பவருடன் சேர்ந்து சென்றுள்ளார்.
![simbu-latest-cinemapettai](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/01/simbu-latest-cinemapettai.jpg)
நெற்றியில் பட்டையும் குங்குமமும் என முழு சாமியாராக மாறிய சிம்புவின் புகைப்படம் தற்போது இணையதளங்களில் செம வைரலாகியுள்ளது. போகிற போக்கை பார்த்தால் சிம்பு சாமியார் படத்தில் நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.