செவ்வாய்க்கிழமை, ஜனவரி 28, 2025

வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது.. 4 நாளில் புஸ்ஸுன்னு போன ‘பத்து தல’

ஈஸ்வரன், மாநாடு, வெந்து தணிந்தது காடு என அடுத்து அடுத்து படங்களை கொடுத்து அவருடைய ரசிகர்களையும் சினிமா வட்டாரங்களையும் சந்தோசப்படுத்திய சிம்பு. இப்போது மறுபடியும் எல்லாரையும் புஸ்ஸாக்கும் விதமாக ‛பத்து தல’ ஷூட்டிங்கில் இருந்து தீடீரென சென்னை திரும்பி விட்டார்.

சிம்பு மறுபடியும் பார்ம்க்கு வந்து விட்டார் என்று அவருடைய ரசிகர்கள் எண்ணி கொண்டிருந்த வேளையில் தான் இந்த ட்விஸ்ட் நடந்து இருக்கிறது. சிம்பு சரியாக படப்பிடிப்புக்கு வருவதில்லை என பல பஞ்சாயத்துக்களும் பிரச்சனைகளும் நடந்து, சிம்பு எங்கே இருக்கிறார் என யாருக்கும் தெரியாது இருந்த நிலையில் சட்டென உடம்பை குறைத்து கம்பேக் கொடுத்தார் சிம்பு.

அதன் பிறகு சட்டென படங்களின் அறிவிப்புகளும் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகின. ஈஸ்வரன், மாநாடு, மகா, வெந்து தணிந்தது காடு என்ற வரிசையில் ‛பத்து தல’ படமும் சேர்ந்தது. இந்த படத்தில் சிம்புக்கு மாஸான கேரக்டர்.

ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா இந்த படத்தை தயாரிக்கிறார். அப்பா ராஜேந்திரனின் உடல்நலக் குறைவு காரணமாக அமெரிக்கா சென்றிருந்த சிம்பு அங்கிருந்து திரும்பியதும் ‛பத்து தல’ படப்பிடிப்பிற்கு சென்றார்.

கடந்த வாரம் அங்கே எடுத்த 2 புகைப்படங்களை சமூகவலை தளங்களில் பகிர்ந்தார். இந்த நிலையில் தான் இப்படி ஒரு செய்தி வந்திருக்கிறது. படப்பிடிப்பு ஆரம்பித்த நான்கு நாட்களில் சென்னை திரும்பி விட்டார் என்று! படத்தின் ஒரு காட்சி நல்ல முறையில் படமாகப்பட்டு இருக்கிறது, இருந்தாலும் அந்த காட்சிக்கான உடலமைப்பு சரியாக இல்லையென சிம்பு கூறியிருக்கிறார்.

இயக்குனர் பரவாயில்லை என்று கூறியும் எனக்கு சரியான உடலமைப்பு வேண்டும், அதற்கு ஒரு மாத கால அவகாசம் வேண்டும் எனவும் கூறி சென்னை திரும்பி விட்டார் சிம்பு. இதனால் டைரக்டர் பயங்கர கடுப்பில் உள்ளாராம். படம் ஆரம்பித்த நான்கு நாட்களில் சிம்பு இப்படி செய்திருப்பது, சிம்பு மீண்டும் பழையபடி ஆகி விடுவாரோ என்ற எண்ணத்தை வர வைக்கிறது.

Trending News