தமிழ் சினிமாவை பொருத்தவரை எப்போதுமே பண்டிகை காலங்களில் மட்டுமே முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும். அதற்கு காரணம் அன்று அனைத்து தரப்பு மக்களுக்கும் விடுமுறை கொடுக்கப்பட்டு அனைவரும் படத்தை திரையரங்கில் பார்க்க செல்வார்கள் என்பதற்காகவே படத்தை பண்டிகை நாளில் வெளியிடுவார்கள்.
முதலில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருந்த அண்ணாத்த படத்தை தீபாவளி அன்று வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் உலக நாடுகள் மற்றும் கேரளா போன்ற ஒரு சில பகுதிகளில் இன்னும் திரையரங்குகள் திறக்கப்படாததால் அண்ணாத்த படத்தை பொங்கலுக்கு வெளியிடத் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது.
இதனால் உச்ச சந்தோஷத்தில் இருந்தார் சிம்பு. ஏனென்றால் அண்ணாத்த படமுடன் சிம்பு நடிப்பில் உருவான மாநாடு போடவும் ஒரே நாளில் வெளியிட திட்டமிட்டிருந்தனர். இதனால் சிம்பு தனது படத்தின் வெற்றியை நினைத்து சற்று யோசித்தார்.
ஆனால் அண்ணாத்த படம் பொங்கலுக்கு வெளிவருவதாக தகவல் வெளியானதையடுத்து சிம்பு தன்னுடைய மாநாடு படம் மட்டுமே தான் வெளியாக இருக்கிறது. அதனால் வசூலை வாரி குவித்து விடலாம் என திட்டமிட்டிருந்தார். தற்போது அதற்கு வாய்ப்பில்லை என பலரும் கூறி வருகின்றனர்.

அண்ணாத்த படம் ஒதுங்கியதால் தற்போது அனைத்து முன்னணி நடிகர்களும் தீபாவளி அன்று படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். அந்த வரிசையில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடித்து கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மகான் திரைப்படத்தை தீபாவளியன்று வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதனால் தற்போது சிம்பு மற்றும் விக்ரம், துருவ் விக்ரம் மூவரும் மோத உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.