திரும்பும் திசையெல்லாம் மாநாடு படம் குறித்த செய்திகள் ஒலித்து கொண்டே உள்ளது. அந்த அளவிற்கு இப்படம் மக்கள் மத்தியில் ஒரு மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் இந்த அளவிற்கு வெற்றி பெறும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். வெங்கட் பிரபு – சிம்பு – யுவன் கூட்டணியில் மாநாடு படம் ஒரு மேஜிக்காகவே உள்ளது.
இந்த வெற்றியை ருசிக்க படக்குழுவினர் பல போராட்டங்களை கடந்து வந்துள்ளனர். அவர்களின் கஷ்டத்திற்கு நல்ல பலன் கிடைத்து விட்டது. தற்போது மாநாடு படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற படமாக பெயர் பெற்றுள்ளது. ரஜினி முதல் பல திரைபிரபலங்கள் இப்படத்தை பாராட்டி வருகிறார்கள்.
மேலும் மாநாடு படம் இந்தியாவில் மட்டும் சக்கைப்போடு போடவில்லை. ஜப்பானிலும் நல்ல வெற்றி பெற்றுள்ளதாம். ரஜினிக்கு அடுத்தபடியாக ஜப்பான் மக்கள் ஒரு படத்திற்கு வரவேற்பு அளித்துள்ளார்கள் என்றால் அது மாநாடு படம் தான். சிம்புவின் புகழ் தற்போது ஜப்பான் வரை கொடிகட்டி பறக்க இப்படம் தான் காரணம்.
அதுமட்டுமல்ல மாநாடு படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்ற இப்போதே போட்டா போட்டி நிலவுகிறதாம். அதிலும் குறிப்பாக தெலுங்கு மற்றும் ஹிந்தியில் இப்படத்தை ரீமேக் செய்ய தான் கடுமையான போட்டி நிலவுகிறதாம். வெங்கட் பிரபு வெளியிட்ட மாநாடு பாடல்கள்
ரீமேக் உரிமையை கைப்பற்ற எவ்வளவு தொகை வேண்டுமானாலும் கொடுக்க தயாராக உள்ளார்கள் என்றால் பார்த்துக்கோங்க. இந்நிலையில் மாநாடு படத்தின் சவுண்ட் டிராக் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதை அப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
மாநாடு படத்தின் பாடல்களை கேட்டு மகிழுங்கள் அனைத்து தளங்களிலும் உள்ளது என கூறி யூடியூப் லிங்க் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். இன்னும் சில நாட்களுக்கு மாநாடு படத்தின் அலை ஓயாது.