வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

சிம்பு பிறந்தநாளில் 5 மொழிகளில் வெளியான மாநாடு டீசர்.. இணையத்தை மெர்சலாக்கிய வெங்கட் பிரபு

சிலம்பரசனின் பிறந்தநாள் இன்று என்பதால் மாநாடு பட டீஸரை வித்தியாசமான முறையில் வெளியிட வெங்கட்பிரபு திட்டமிட்டு இருந்தனர். அதாவது  மாநாடு என்ற பெயருக்கு ஏற்ப போலவே ஐந்து மாநிலங்களின் மொழியிலும் படத்தின் டீசரை வெளியிட்டு உள்ளனர்.

அரசியலை மையமாக வைத்து உருவாகியுள்ள மாநாடு படத்தில் சிலம்பரசன் அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் இஸ்லாமிய இளைஞனாக நடித்துள்ளார். இதுவரைக்கும் சிலம்பரசனை யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு வித்தியாசமான முறையில் படக்குழுவினர் சிம்புவின் கெட்டப் வைத்துள்ளனர்.

மாநாடு படத்தின் டீசரை தமிழில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் மற்றும் ஹிந்தியில் அனுராக் காஷ்யப், மலையாளத்தில் பிரித்திவிராஜ், தெலுங்கில் ரவிதேஜா, கன்னடத்தில் கிச்சா சுதீப் ஆகிய நடிகர்கள் அவர்கள் மொழியில் மாநாடு படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர்.

சிம்புவின் படத்தின் டீசர் 5 மொழியில் வெளியாவது இதுவே முதல் முறையாகும், இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி உச்சத்தில் உள்ளனர்.

இப்படத்தின் டீசர் 5 மொழியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று சமூக வலைகளில் வைரலாகி வருகிறது.

Trending News