தமிழ் சினிமாவில் அதிகமாக கிசுகிசுவில் மாட்டிக் கொண்டவர்கள் நயன்தாரா, சிம்பு. 2006 இல் வெளியான வல்லவன் படத்தில் இருவரும் ஜோடியாக நடித்தார்கள். இப்படத்திலிருந்து நயன்தாரா, சிம்பு இருவரும் காதலித்து வந்தார்கள். இப்படத்திற்காக முன்னதாக சிம்பு நடித்த தொட்டி ஜெயா படத்திலேயே நயன்தாரா நடிக்க இருந்தார். சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போக அந்த படத்தில் கோபிகா நடித்தார்.
சிம்புக்கு வல்லவன் படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. வல்லவன் படத்தில் சிம்பு, நயன்தாரா நெருக்கமாக உள்ள படங்கள் அப்போது இணையத்தில் வெளியானது. சிம்பு, நயன்தாரா காதல் விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில் சில காரணங்களால் இருவரும் பிரிந்து விட்டனர்.
காதலித்து பிரிந்துவிட்ட சிம்புவும் நயன்தாராவும் பாண்டியராஜ் இயக்கத்தில் இது நம்ம ஆளு படத்தில் இணைந்து நடித்து இருந்தார்கள். இப்படத்தில் இருவரும் ஒன்றாக நடித்தாலும் ஒருவர் பற்றி மற்றொருவர் பேசுவதை தவிர்த்து வந்தனர். அதன் பிறகு நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார்.
இன்று நயன்தாராவின் பிறந்தநாளை விக்னேஷ் சிவன் மிகவும் விமரிசையாக கொண்டாடினார். நள்ளிரவில் வானவேடிக்கை உடன் லேடி சூப்பர்ஸ்டார் என்று எழுதப்பட்டிருந்த கேக்கை நயன்தாரா வெட்டினார். இந்த பிறந்தநாள் விழாவில் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே வந்திருந்தார்கள்.
நயன்தாரா பிறந்தநாளன்று அவர் நடித்த நெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. அதேபோல் சிம்புவின் மாநாடு படத்தின் ஆடியோ லான்ச் இன்று வெளியிடப்பட்டது. இதனால் ரசிகர்களிடையே பெரிய சந்தேகம் எழுந்த நிலையில் அதை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் எண் 9 இருக்கையில் சிம்பு அமர்ந்திருக்கிறார்.
நயன்தாரா பிறந்தநாளன்று ஆடியோ லான்ச், சீட் நம்பர் நயன் என்று சிம்புக்கு இயற்கையாக அமைகிறதா இல்லை அவரே கேட்டு வாங்கிக் உள்ளாரா என ரசிகர்கள் விமர்சிக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இன்று தேதி 18, 1 + 8 = 9 இப்படி அனைத்துமே நயன் சென்டிமென்டாக இருந்துதான் வருகிறது. இதைப்பார்த்து நெட்டிசன்கள் மண்டை மேல உள்ள கொண்டையை மறந்துட்டீங்களே சிம்பு என கலாய்த்து வருகின்றனர்.