வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சிம்பு அவ்வளோ வொர்த் இல்ல.. மாநாடு படத்திற்கு இவ்வளவு விலையா.? தலைதெறிக்க ஓடிய பிரபல நிறுவனம்!

கடந்த சில வருடங்களாக தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் சிம்பு கடைசியாக சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்ற படத்தில் நடித்தார். அந்த படமும் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை.

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற படத்தில் நடித்து உள்ளார். முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது. சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷினி நடித்து வருகிறார்.

யுவன் சங்கர் ராஜா இசையில் மிக பிரம்மாண்டமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சிம்புவுடன் சேர்ந்து எஸ்ஜே சூர்யா, பிரேம்ஜி, கருணாகரன், பாரதிராஜா உள்ளிட்ட முக்கியமான பிரபலங்கள் நடித்து உள்ளனர்.

தற்போது உள்ள சூழ்நிலையில் டிஜிட்டல் தளத்தில் மாநாடு படத்தை வெளியிடலாம் என்று ஒரு பெரிய நிறுவனத்தை அணுகி உள்ளனர். இவர்கள் கூறிய விலையை பார்த்து தலை தெறிக்க ஓடி விட்டனர்.

அதாவது புதிதாக தொடங்கியுள்ள சோனி லைவ் நிறுவனத்திடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. கிட்டத்தட்ட 40 கோடி டீல் பேசப்பட்டுள்ளது. ஆனால் சோனி நிறுவனம் வேண்டாம் என்று மறுத்து விட்டதாம்.

தற்போது இந்த செய்தி கோலிவுட் வட்டாரத்தில் தீ போல் பரவி வருகின்றது. முதல் முயற்சி தோல்வியில் முடிந்தாலும் பொறுத்திருந்து தியேட்டரில் மாநாடு படத்தை பார்க்கலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

simbu kalyani priyadarshan
simbu kalyani priyadarshan

Trending News