புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அப்புறம் தம்பி, மாநாடு ஹிட்டு, நமக்கு ஒரு படம்.. வெட்கமில்லாமல் சிம்புவிடம் வழிந்த தயாரிப்பாளர்

சிம்புவின் படத்தை எந்த ஒரு குறையும் சொல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி பத்து வருடங்கள் ஆகிவிட்டது. கடைசியாக விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை தான் சிம்பு ரசிகர்கள் மட்டுமில்லாமல் தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் கொண்டாடித் தீர்த்தனர்.

அதன்பிறகு சிம்புவுக்கு அப்படி ஒரு படம் அமைந்ததாக என்று கேட்டால் இல்லை. ஆனால் அதற்கெல்லாம் ஒட்டுமொத்தமாக சேர்த்து வைத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படம் வெளியாகி உலகமே கொண்டாடும் வகையில் வெளியான அனைத்து இடங்களிலும் வசூலிலும் சரி விமர்சன ரீதியாகவும் சரி மாபெரும் வெற்றியை குவித்துள்ளது.

திரும்ப வர்றேன் என்று சிம்பு சும்மா சொல்லவில்லை படத்தின் மீதிருந்த நம்பிக்கையில் ஆணித்தரமாக தான் சொல்லியிருக்கிறார். சொன்னது போலவே திரும்பி வந்துவிட்டார். இனி சரியான கதைகளை தேர்வு செய்து படங்களில் நடித்தால் வெகு சீக்கிரமே முன்னணி நடிகராக வந்து விடுவார் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது.

ஒரு மனிதன் வெற்றி பெற்று கொண்டிருக்கும்போது ஒட்டிக் கொள்வது தோல்வியில் இருக்கும்போது அவனை தாழ்த்திப் பேசுவது பொதுவாகவே நடப்பதுதான். அதுவே சினிமாவில் சொல்லவா வேண்டும்.சிம்பு பேட்டி கொடுத்தபோது நன்றாக சம்பாதித்து தயாரிப்பாளர்கள் பலரும்

அவர் தோல்விப் படங்களில் சிக்கிய போது அவரை தாழ்த்திப் பேசி அவரது படங்களுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்தனர்.இந்த நேரத்தில் மாநாடு படம் வெற்றி அடைந்தவுடன் இனிமேல் சிம்புவின் கேரியர் டாப்பில் இருக்கும் என்பதை உணர்ந்து தம்பி நம்மளுக்கு ஒரு கால் சீட்டு என ஒரு தயாரிப்பாளர் வெட்கமே இல்லாமல்

அவர் வீட்டுக்குச் சென்று வாய்ப்பு கேட்டதை நினைத்து இன்னும் சிரித்துக் கொண்டே இருக்கிறாராம் சிம்பு. அவர்தான் இத்தனைக்கும் சிம்புவுக்கு அதிக குடைச்சல் கொடுத்தவர் என்பதும் குறிப்பிட வேண்டியது.

Trending News