புதன்கிழமை, ஜனவரி 15, 2025

மாநாடு எஸ் ஜே சூர்யா கதாபாத்திரத்தை மிஸ் செய்த சூப்பர் நடிகர்.. அடப்பாவமே!

இன்று திரும்பிய பக்கமெல்லாம் திருவிழா கொண்டாட்டம் ஆக இருப்பது சிம்புவின் மாநாடு படம்தான். இவ்வளவு நாளா எங்கேயோ போயிட்ட நீ என சிம்பு ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தமிழ் ரசிகர்களும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.

சிம்பு, எஸ் ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன், ஒய் ஜி மகேந்திரன், எஸ் ஏ சந்திரசேகரன் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே மாநாடு படத்தில் நடித்திருந்தனர். இதில் ஒவ்வொருவரின் கதாபாத்திரமும் ரசிகர்கள் மனதில் ஆணி அடித்தது போல் பதிந்து விட்டது. அந்த அளவுக்கு அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து கதை அமைந்தது.

சிம்புவும் நீண்டநாட்களாக இதுபோன்ற ஒரு வெற்றிப்படத்தை தான் எதிர்பார்த்த நிலையில் அது மாநாடு படம் கொடுத்துள்ளது. மாநாடு படத்தில் சிம்புவையும் தாண்டி அனைவரையும் கவர்ந்த நடிகர் என்றால் அது எஸ்ஜே சூர்யா தான். சமீபகாலமாக எஸ்ஜே சூர்யா நடிக்கும் படங்களை எல்லாம் அவருக்காகவே தியேட்டருக்கு சென்று ரசிகர்கள் பார்க்க தொடங்கி விட்டனர் என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.

அதுவும் மாநாடு படத்தில் காமெடி நடிகரை தேவை இல்லை எனும் அளவுக்கு தன்னுடைய காமெடி கலந்த வில்லத்தனத்தை யதார்த்தமாக நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களின் கைதட்டல்களை வாங்கிவிட்டார். இந்நிலையில் அந்த கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிகர் அரவிந்த்சாமி தான் ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தனி ஒருவன் படத்தை எல்லாம் பார்த்துவிட்டு வெங்கட்பிரபு முதலில் அரவிந்த்சாமி இந்த கதாபாத்திரத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என கருதி அவரிடம் கதையையும் சொல்லி ஓகே செய்துவிட்டாராம். ஆனால் முதலில் மாநாடு கை விடப் போகிறது என்ற தகவலை அறிந்த அரவிந்த்சாமி அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமானது இந்த படத்தில் நடிக்க கால்ஷீட் பிரச்சனை இடையூறு செய்துள்ளது.

அதனைத் தொடர்ந்து வெங்கட்பிரபு பல மொழிகளில் பல நடிகர்களை தேடி பார்த்துள்ளார். ஆனால் கடைசியில் அவரது அசோசியேட் இயக்குனர் ஒருவர் எஸ் ஜே சூர்யாவின் பெயரை பரிந்துரை செய்ய அப்படித்தான் உள்ளே வந்தாராம் எஸ் ஜே சூர்யா.

இப்போ மாநாடு படத்துக்கு அவர்தான் பிளஸ். உண்மையில் எஸ்ஜே சூர்யாவை தவிர அந்த கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடித்திருந்தால் இவ்வளவு சிறப்பாக வந்திருக்குமா? என்பதை ரசிகர்கள் கமெண்டில் பதிவு செய்யலாம்.

Trending News