சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

சிம்புவுக்கு பொண்ணு ரெடி, இந்த வருஷம் கல்யாணம்.. மாதம் ஒருமுறை பேட்டி கொடுக்கும் டி ராஜேந்தர்

சிம்பு நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போதுதான் தன்னுடைய சினிமா பாதையில் கவனம் செலுத்தி அடுத்தடுத்த படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார். நன்றாக சென்று கொண்டிருந்த தன்னுடைய கேரியரை சோம்பேறித்தனத்தால் கெடுத்துக் கொண்டார்.

ஒரு கட்டத்தில் உடல் எடை கூடி பார்ப்பதற்கே அங்கிள் மாதிரி இருந்த சிம்பு சமீபகாலமாக அழகான ஆண்களுக்கு டப் கொடுக்கும் வகையில் தன்னுடைய உடல் எடையை குறைத்துக் காட்டி கிண்டல் செய்தவர்களை எல்லாம் வேற லெவலில் தெறிக்க விட்டார்.

சமீபத்தில் வெளியான ஈஸ்வரன் படம் பெரிய அளவு வெற்றியை பெறவில்லை என்றாலும் முதலுக்கு மோசம் இல்லை என்கிற அளவுக்கு ஓடி சிம்புவின் ரீ என்ட்ரியை காப்பாற்றி விட்டது. அதனைத் தொடர்ந்து அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் மாநாடு படத்திற்கு தான் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

simbu-latest-cinemapettai
simbu-latest-cinemapettai

சமீபத்தில் மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் வருகின்ற பிப்ரவரி 3ம் தேதி சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு மாநாடு டீசர் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அடிக்கடி சிம்புவின் திருமணம் பற்றிய தகவல்கள் சமூக வலைதளங்களில் உலாவி கொண்டிருகின்றனர்.

சமீபத்தில்கூட சிம்பு தனது பழைய காதலிகளான திரிஷா மற்றும் ஹன்சிகா ஆகிய இருவருடன் மீண்டும் தன்னுடைய நட்பை தொடங்கி விட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால் அதனை சிம்பு குடும்பத்தினர் மறுத்தனர். பெண் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் விரைவில் திருமணம் செய்யப்போவதாகவும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பே அறிவித்தனர்.

தற்போது மீண்டும் டி ராஜேந்தர் கொடுத்த பேட்டியில், ஈஸ்வரன் அருளால் 2021 ஆம் ஆண்டு சிம்புவுக்கு திருமணம் கண்டிப்பாக நடைபெறும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் சிம்புவின் நெருங்கிய சொந்தத்தில் இருந்து பெண் பார்த்து உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. போன வருடம் இதே தான் சொன்னீங்க என சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.

Trending News