ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

பொன்னியின் செல்வனில் நடிக்க இருந்த சிம்பு.. பயத்தில் விரட்டியடித்த ஜெயம் ரவி மற்றும் கார்த்தி

மணிரத்னம் இயக்கத்தில் சுமார் 500 கோடி பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது.

மேலும் பொன்னியின் செல்வன் படத்தில் முதன்மை கதாபாத்திரங்களாக விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், ஜெயராம் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

இந்த படத்தில் ஜெயம் ரவிதான் முதன்மை கதாபாத்திரம் எனவும் கூறப்படுகிறது. முதலில் ஒரு பாகமாக வெளியாக இருந்த பொன்னியின் செல்வன் படத்தின் நீளம் கருதி இரண்டு பாகமாக மாற்றி ps1 என முதல் பாகத்திற்கு டைட்டில் வைத்துள்ளனர்.

பான் இந்தியா படமாக வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாக அதிக வாய்ப்பு இருக்கிறது. கடைசியாக மணிரத்தினம் செக்கச்சிவந்த வானம் என்ற படத்தை இயக்கியிருந்தார்.

அந்த படத்தில் சிம்பு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சிம்புவின் மீது பல்வேறு சர்ச்சைகள் எழுந்தாலும் சிம்புவை நம்பி அந்த கதாபாத்திரத்தை கொடுத்தார் மணிரத்னம். சிம்புவும் அதற்கு உண்மையாக நடந்து கொண்டார் என்றே தகவல்கள் கிடைத்தன.

அதனைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்திலும் சிம்பு ஒரு சூப்பர் கேரக்டர் கொடுக்க ஆசைப்பட்டாராம் மணிரத்னம். ஆனால் இதை கேள்விப்பட்ட ஜெயம் ரவி மற்றும் கார்த்தி போன்றோர் சிம்பு சரியாக படப்பிடிப்புக்கு வருவதில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு இருக்கும்போது இந்த படத்திலும் அப்படி செய்துவிட்டால் எங்களுடைய அடுத்தடுத்த படங்கள் பாதிப்பை சந்திக்கும் என்பதால் அவர் வேண்டாம் என கூறி விட்டார்களாம். இல்லையென்றால் சிம்புவும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருப்பாராம்.

simbu-maniratnam-cinemapettai
simbu-maniratnam-cinemapettai

Trending News