சிம்புவை மாதிரி தமிழ் சினிமாவில் நிறைய நல்ல படங்களை இழந்த நடிகர்கள் கிடையவே கிடையாது. இன்று பல நடிகர்களுக்கும் கேரியரை உச்சத்திற்கு தூக்கிச்சென்ற படங்களில் சில சிம்புவுக்கு சென்று வந்த கதைதான்.
இவ்வளவு ஏன் சமீபத்தில் வெற்றிமாறன் மற்றும் தனுஷ் கூட்டணியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற வட சென்னை படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் கூட சிம்புதான் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான்.
அந்த மாதிரி சிம்பு தமிழ் சினிமாவில் நிறைய சூப்பர்ஹிட் படங்களை இழந்துள்ளார். அந்த வகையில் சிம்பு தனக்கு முக்கியத்துவம் இல்லை எனக் கூறிய கதையில் விஷால் நடித்த அந்த படம் பிளாக்பஸ்டரான கதையை படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் திமிரு. 2006 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை இயக்கியவர் தருண்கோபி. சுறுசுறுப்பாகவும் விறுவிறுப்பாகவும் வெளியான இந்த திரைப்படம் மாஸ் வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் விஷாலுக்கு அதிரடி ஹீரோ என்ற பட்டத்தையும் கொடுத்தது.

இந்த படத்தின் கதையை முதன் முதலில் சிம்புவுக்கு தான் சொல்லப்பட்டதாம். படத்தின் கதையை கேட்ட சிம்பு படத்தில் ஹீரோயினுக்கு தான் முக்கியத்துவம் இருக்கிறது எனவும், தனக்கு வெயிட்டான கதாபாத்திரம் இந்த படத்தில் இல்லை எனவும் கூறி மறுத்து விட்டாராம்.
அதன்பிறகு திமிரு படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதையெல்லாம் சிம்பு கேள்விப்பட்டிருப்பார். இன்று இழந்த மார்க்கெட்டை மீட்க போராடிக் கொண்டிருக்கும் சிம்பு தனக்கு வந்த கதைகளில் மறுப்பு சொல்லாமல் நடித்திருந்தால் எப்போதோ முன்னணி நடிகராக வந்திருப்பார் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.