திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

சிம்புவுக்கு ஜோடி இந்த நடிகையா? பெரிய டைரக்டர் மகள் ஆச்சே!

சினிமாவில் சினிமாவைச் சேர்ந்த அவர்களின் மகன் மற்றும் மகள்கள் ஆகியோருக்கு எளிதில் வாய்ப்பு கிடைத்துவிடும் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். ஆனால் அதை எப்படி தக்க வைக்க போகிறார்கள் என்பது அவர்களது கதை தேர்வில் தான் தெரியவரும்.

இந்த வகையில் தமிழ் சினிமாவில் நிறைய வாரிசு நடிகர்கள் வந்திருக்கிறார்கள். ஆனால் ஒரு சில நடிகர்கள் மட்டுமே ரசிகர்களின் மனதை கவர்ந்த இன்று உச்சத்தில் இருக்கின்றனர். சினிமாவுக்கு சம்பந்தமே இல்லாத பலரும் சாதித்த கதையும் இங்கு உண்டு.

அப்படிப்பட்ட வாரிசு நடிகர்களில் ஒருவர் தான் சிம்பு. மாநாடு என்ற வெற்றிப் படத்திற்குப் பிறகு அடுத்தடுத்து பத்து தல, வெந்து தணிந்தது காடு போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து முழுநீள காமெடிப் படமான கொரோனா குமார் என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக பல முன்னணி நடிகைகளை நடிக்க ரெடியாக இருந்த போதிலும் தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகள் அதிதி ஷங்கரை ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு. இந்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் ஏற்கனவே கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் விருமன் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து மற்றொரு முன்னணி நடிகரான சிம்புவின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதை பார்க்கும்போது கண்டிப்பாக அவரது டார்கெட் முன்னணி நடிகர்கள் தான் என்பது தெளிவாகிறது.

Trending News