வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

பவர் ஸ்டாருக்கு ஜோடியாக சிம்பு பட நடிகை.. அதுவும் அந்த மாதிரி படத்தில்.. செட் ஆவாரா?

சிம்பு பட நடிகை ஒருவர் பவர் ஸ்டாருக்கு ஜோடியாக ஒரு வரலாற்று படத்தில் நடிக்க உள்ள செய்தி தான் தற்போது கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கிளாமர் நாயகி எப்படி வரலாற்று படத்திற்கு செட் ஆவார் எனும் கேள்விகள் எழுந்துள்ளன.

சிம்பு தற்போது சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து கலக்கி வருகிறார். அந்தவகையில் கடந்த பொங்கலுக்கு வெளியான ஈஸ்வரன் திரைப்படம் முதலுக்கு மோசமில்லை என்றாலும் ஓரளவு நல்ல வசூலை பெற்று விட்டதாக தெரிவிக்கின்றனர்.

இதனை தொடர்ந்து ஈஸ்வரன் படத்தை வெற்றியடைய வைத்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி என தன்னுடைய அறிக்கையை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து சிம்பு நடிப்பில் அடுத்தடுத்து பத்து தல, மாநாடு போன்ற படங்கள் உருவாகி வருகின்றன. இதில் மாநாடு படத்தின் டீசர் சிம்புவின் பிறந்தநாளான பிப்ரவரி 3ஆம் தேதி வெளியாக போவதாக அறிவித்தனர்.

இந்நிலையில் சிம்புவின் ஈஸ்வரன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த நிதி அகர்வால் தெலுங்கு பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிக்கும் அடுத்த படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளாராம். மேலும் அது ஒரு வரலாற்று படம் எனவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

தமிழில் சிம்பு நடிப்பில் வெளியான வானம் படத்தை இயக்கிய கிரிஸ் என்பவர் இயக்க உள்ளாராம். தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகருக்கு ஜோடியாக விட்டோம் என்ற கொண்டாட்டத்தில் உள்ளாராம் நிதி அகர்வால். ஆனால் அதை கெடுக்கும் வகையில் சினிமா வட்டாரங்களில் வேலை நடந்து வருகிறதாம்.

nidhi-agarwal-cinemapettai
nidhi-agarwal-cinemapettai

நிதி அகர்வால் ஒரு கிளாமர் நாயகி என்பது அனைவருக்குமே தெரியும். அப்படிப்பட்ட நடிகையை எப்படி வரலாற்று படத்தில் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற கேள்வியை எழுப்பி உள்ளனர். ஏன் முன்னதாக அனுஷ்கா கூட கிளாமர் நாயகியாக இருந்து வரலாற்று நாயகியாக சாதனை படைத்தவர் தானே என தன் பங்குக்கு சவுண்டு விடுகிறாராம் நிதி அகர்வால்.

Trending News