வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சிம்புவை வைத்து படம் தயாரிக்க ஆசைப்பட்ட ராதிகா.. இதை கேட்டவுடன் தெறித்து ஓடி விட்டாராம்

வெங்கட்பிரபு இயக்கத்தில் மிகுந்த பொருட்செலவில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் மாநாடு படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்துள்ளார். மாநாடு படம் பல பிரச்சனைகளுக்கு பிறகு திரையரங்கில் வெளியாகுமா என எதிர்பார்த்த நிலையில் இன்று வெளியானது.

சமீபகாலமாக நடிகர் சிம்புவின் படங்கள் பல பிரச்சனைக்கு பிறகு தான் வெளியாகிறது. சிம்பு மேலிருந்த நெகட்டிவ் இமேஜ் மாறி தற்போது நிறைய படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறது. தற்போது சிம்புவை வைத்து ஒரு படம் தயாரிக்க சரத்குமார் ஆசைப்படுகிறார்.

இதனால் நடிகை ராதிகா தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் சிம்பு ஒரு படம் நடிக்க வேண்டுமென சிம்புவிடம் கேட்டுள்ளார். இதற்கு சம்மதம் தெரிவித்த சிம்பு, சம்பளம் போன்ற விஷயங்களை அவரது அம்மா உஷா ராஜேந்திரனிடம் பேசிக் கொள்ளும் படி சொல்லி விட்டாராம்.

இதனால் ராதிகா, சிம்புவின் அம்மாவிடம் பேசும் பொழுது படத்தின் சம்பளத்தை பற்றி பேசியுள்ளார். அதற்கு சிம்புவின் அம்மா உஷா, சிம்பு இப்போது வாங்கும் சம்பளத்தைவிட இரண்டு மடங்கு கூடுதல் தொகையை சொல்லி இதில் பேரம் என்பதே கிடையாது என்று சொல்லிவிட்டாராம்.

அதைக்கேட்ட ராதிகா சரத்குமார் அதிர்ச்சியடைந்து சிம்புவை வைத்து படம் தயாரிக்கும் எண்ணத்தை நிறுத்திவிட்டாராம். சிம்பு தற்போது பத்துதலை, வெந்து தணிந்த காடு, கொரோனா குமார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

simbu
simbu

Trending News