புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சிம்புவின் அடுத்த படத்தின் பட்ஜெட் 180 கோடியா!. மலையாள சேட்டன் உதவியோடு களம் இறங்கும் STR

Simbu: சிம்புவின் அடுத்த பட அப்டேட் ஒன்று வெளியாகி அவருடைய ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு சிம்பு சினிமாவை விட்டு பீல் டவுட் ஆகி விடுவாரோ என அவருடைய ரசிகர்களுக்கு பெரிய பயம் இருந்தது.

எக்கச்சக்கமாக எடை கூடி, சினிமாவில் நடிப்பதிலும் ஆர்வம் இல்லாமல் இருந்தார். மீண்டும் விட்ட இடத்தை பிடிப்பதற்காக மறுபிறப்பு எடுத்து வந்தது போல் சினிமாவுக்குள் பிரவேசமானார். ஈஸ்வரன், மாநாடு, வெந்து தணிந்தது காடு, 10 தல என அடுத்தடுத்து அவருடைய படங்களும் ரிலீஸ் ஆனது.

உலகநாயகன் கமலஹாசன் தயாரிப்பில் இயக்குனர் தேசிய பெரியசாமி இயக்கத்தில் சிம்பு தன்னுடைய 48வது படத்தில் கமிட் ஆனார். இந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் ஆரம்பிக்கப்படாத நிலையில் கமல் மற்றும் மணிரத்தினம் கூட்டணியில் உருவாகிக்கொண்டிருக்கும் தக்லைஃப் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார்.

இந்த நிலையில் அவருடைய அடுத்த படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது. சிம்பு அடுத்து ஒரு பான் இந்தியா படத்தில் நடிப்பதற்கு திட்டமிட்டு இருக்கிறார். இந்த படத்தின் பட்ஜெட் 180 கோடி ஆகும். ஒரு சில முக்கியமான தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அர்ச்சனா கல்பாத்தி, தில் ராஜூ போன்றவர்களும் இந்த லிஸ்டில் இருக்கிறார்கள். மேலும் இந்த படத்தில் மோகன் லால் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News