Simbu: சிம்பு இப்போது மணிரத்தினம் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி இருக்கும் தக் லைப் படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் ஆண்டவர் பிறந்த நாளன்று வெளியான டீசரில் சிம்புவின் காட்சிகள் சிறப்பாக இருந்தது.
அடுத்த ஜூன் மாதத்தை குறி வைத்திருக்கும் இப்படம் சிம்புவுக்கு பெரும் பிரேக்காக இருக்கும். அதை அடுத்து அவருடைய 48வது படமும் சத்தம் இல்லாமல் வளர்ந்து வருகிறது. பீரியட் காலகட்டத்தில் உருவாகும் இப்படத்தில் அவர் இரு தோற்றத்தில் நடிக்கிறார்.
இது தவிர ஏஜிஎஸ் தயாரிக்கும் படத்திலும் நடிக்க அவர் கமிட் ஆகியுள்ளார். இப்படி மூன்று படங்கள் அவருக்கு அடுத்தடுத்து ரிலீசாக இருக்கும் நிலையில் தனுஷ் பட தயாரிப்பாளருடனும் அவர் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.
தனுஷ் பட தயாரிப்பாளருடன் இணையும் சிம்பு
அதன்படி இட்லி கடை பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளார். இது உறுதியான நிலையில் தான் சிம்பு அவருடைய திருமணத்தில் கலந்து கொண்டார்.
அப்போது தனுசுடன் இணைந்து எடுத்த போட்டோக்கள் கூட வைரலானது. அதேபோல் ஆகாஷ் சிவகார்த்திகேயன் சுதா கொங்கரா இணையும் படத்தையும் தயாரிக்க உள்ளார். இது தவிர தனுஷின் அடுத்த ப்ராஜெக்ட்டும் டான் பிக்சர்ஸ் தான் தயாரிக்கிறது.
மேலும் அதர்வா நடிக்கும் ஒரு படம் மற்றும் விஜய் சேதுபதி திரிஷாவின் 96 பார்ட் 2 ஆகிய படங்களையும் இந்த நிறுவனம் தயாரிக்கிறது. இப்படியாக டாப் ஹீரோக்களை தன் வசப்படுத்தி இருக்கிறார் ஆகாஷ்.