புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

நயன்தாரா தெய்வப் பெண்.. சிம்பு என்னிடம் வந்தால் திருமணம் நடக்கும்., பரபரப்பை கிளப்பிய பெண்!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. பல காதல் தோல்விகளை சந்தித்துள்ள நடிகர் சிம்புவிற்கு அவரது தந்தை ராஜேந்திரன் பல ஆண்டுகளாக பெண் தேடி வருகிறார். ஆனால் தற்போது வரை சிம்புவிற்கு திருமணம் கைகூடவில்லை.

சிம்புவின் திருமணம் தள்ளிப் போவதால் அவரது தம்பி குறளரசன் தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தற்போது வரை சிம்பு திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளார். இந்நிலையில் சிம்புவிற்கு திருமண தோஷம் உள்ளது. அவர் என்னிடம் வந்து குறி கேட்டால் தான் அவருக்கு திருமணம் நடக்கும் என பெண் சாமியார் ஒருவர் கூறியுள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த இராஜ குடும்பத்தில் பிறந்தவர் லட்சுமி அம்மா. சிறு வயதிலிருந்தே ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டு இருப்பதால் ஐந்து சித்தர்களிடம் தீட்சை பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் நடிகைகள் குறித்தும் நடிகர் சிம்பு குறித்தும் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “நடிகைகள் உள்ளே இருக்கும் வேதனைகளை மறைத்து கொண்டு போலியாக சிரித்து நடித்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் அவர்களுக்கு அவர்களின் தொழில் மீது கசப்பு ஏற்படும். அப்போது திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் திருமண வாழ்க்கையில் ஏமாற்றம் ஏற்படும் போது அது அவர்களை அதிகளவில் பாதிக்கிறது. தமிழ் சினிமாவில் இருக்கும் த்ரிஷா, நயன்தாரா, அனுஷ்கா போன்ற நடிகைகள் தெய்வப் பெண்கள்” என கூறியுள்ளார்.

simbu-new-look
simbu-new-look

மேலும் சிம்புவின் திருமணம் குறித்து கேட்டதற்கு, “சிம்புவுக்கு தோஷம் உள்ளது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு ரகசியம் இருக்கும். அவரது குடும்பம் குறித்த ரகசியத்தை என்னிடம் கேட்டு அறிந்து பரிகாரம் செய்தால் தோஷங்கள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்” என கூறியுள்ளார்.

Trending News