வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

தேசிய விருது நடிகையுடன் ஜோடி போடும் சிம்பு.. மாஸானா இயக்குனருடன் கூட்டணி

சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு சிம்புவின் மார்க்கெட் வேற லெவலில் எகிறிக் கொண்டிருக்கிறது.

இதனால் இவரது அடுத்த பட அப்டேட் என்ன என்பதையும் ரசிகர்கள் ஆர்வத்துடன் தெரிந்து கொள்கின்றனர். இந்நிலையில் சிம்புவின் அடுத்த படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கவுள்ளார். சூரரைப்போற்று திரைப்படத்தின் மூலம் அதிக கவனம் பெற்ற இயக்குனர் சுதா கொங்கரா அந்த படத்தை தற்போது ஹிந்தியிலும் ரீமேக் செய்யும் முயற்சியில் இருக்கிறார்.

Also Read: வெந்து தணிந்தது காடு படத்தின் முழு வரவு, செலவு ரிப்போர்ட்.. கோலிவுட்டை அசரவைத்த மேனன்

சமீபத்தில் இந்த படத்திற்கு 5 தேசிய விருதுகள் கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது. எனவே மாஸானா இயக்குநர் சுதா கொங்கரா- சிம்பு கூட்டணியில் உருவாகும் படத்தை, மிகப்பெரிய வெற்றி கண்ட கேஜிஎஃப் படத்தை தயாரித்த அந்த நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரிக்க உள்ளது.

மிகப்பெரிய அளவில் பெரும் பட்ஜெட்டில் சிம்பு நடிக்கும் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக, நடிகர் திலகம் படத்தில் சிறப்பாக நடித்து தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கிறார். சிம்பு-கீர்த்தி சுரேஷ் இணைந்து ஒரு படம் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

Also Read: சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்கை மறுத்த சிம்பு.. என் லெவலுக்கு அவ்ளோ இறங்க முடியாது பாஸ்

மேலும் சிறப்பு என்னவென்றால் சுதா கொங்கராவின் கனவு திரைப்படமாக இந்த படம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே ரியல் ஸ்டோரி டைரக்ஷன் செய்வதில் கைதேர்ந்தவராக இருக்கும் சுதா கொங்கரா, இந்தக் கதைக்கு சிம்பு தான் சரியான தீர்வு என அவரைத் தேர்வு செய்திருக்கிறார்.

பிரம்மாண்டமான பட்ஜெட்டில் துவங்கியிருக்கும் இந்த படத்தின் முழு அறிவிப்பும் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த தகவலை அறிந்த சிம்பு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். மேலும் இந்த படத்தின் மூலம் சிம்புவுக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என்று இப்போதே அவர்கள் கூறி வருகின்றனர்.

Also Read: 5 மாஸ் ஹீரோக்களை உருவாக்கிய படங்கள்.. தனக்குத்தானே சிம்பு கொடுத்த சூப்பர் ஹிட்

Trending News