திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ஒரு வழியா வந்த விடிவு காலம்.. எஸ்.டி.ஆர் 48-க்கு அட்டகாசமாக தயாரான சிம்பு

Actor Simbu: சிம்புவின் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் வெளிவந்த நிலையில் எஸ்டிஆர் 48 பட அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. கமல் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கும் இப்படத்தில் சிம்பு இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு கேரக்டரில் நடிக்க இருக்கிறார்.

அந்த வகையில் பீரியட் கால படமாக உருவாகும் இப்படத்தில் அவர் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் ரசிகர்களை உற்சாகமடைய வைத்தது. அதை தொடர்ந்து படப்பிடிப்பு எப்போது ஆரம்பிக்கும் என்ற கேள்விகளையும் அவர்கள் எழுப்பி வந்தனர்.

Also read: சிம்பு வீட்டு வாசலில் நிற்கும் பெரிய கியூ.. வேதாளத்தை பழையபடி முருங்கை மரத்தில் நல்ல ஏற வைக்கும் உலக நாயகன்

ஆனால் சிம்பு, ஐசரி கணேஷ் இருவருக்கும் இடையே இருந்த பிரச்சனையின் காரணமாக இப்படம் ஆரம்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதாவது சிம்புவுக்கு எப்போது வேண்டுமானாலும் ரெட் கார்டு கொடுக்கப்படலாம் என்ற பேச்சு எழுந்தது.

அதை அடுத்து நடந்த பேச்சு வார்த்தையில் இந்த பிரச்சனை சுமூகமாக முடித்து வைக்கப்பட்டது. அதனால் விரைவில் இப்படம் தொடங்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது அது குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வகையில் எஸ்.டி.ஆர் 48 படத்திற்கான ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள் இப்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Also read: கமல், சூர்யா கொடுத்த தைரியம்.. பார்ட் 2 படத்திற்கு பழைய காதலியை ஜோடியாக்கும் சிம்பு

அதை தொடர்ந்து அக்டோபர் மாதத்தில் படப்பிடிப்பை தொடங்கவும் தயாரிப்பு தரப்பு தயாராகி இருக்கிறது. மேலும் பீரியட் கால செட் வேலைகள் நடைபெறுவதில் சிறு சிறு தாமதம் ஏற்பட்டது தான் படப்பிடிப்பு தள்ளிப்போனதற்கு முக்கிய காரணம் என பட குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இல்லையென்றால் எப்போதோ இப்படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டிருக்கும். இதற்கு இடையில் சிம்பு, ஐசரி கணேஷ் தயாரிக்கும் படத்திற்கான கதையையும் கேட்டு ஓகே செய்து விட்டாராம். அந்த வகையில் தற்போது கமல், சிம்பு கூட்டணியில் உருவாகும் இப்படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாகியுள்ளது.

Also read: சிம்பு இடத்தை பிடித்த வைகைப்புயல் வடிவேலு. . மாமன்னன் படத்தால் அடித்த ஜாக்பாட்

Trending News