வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

கோடிகளை கொட்டிக் கொடுத்தாலும் வேண்டாம்.. ரஜினியை போல தேடி வந்த வாய்ப்பை மறுத்த சிம்பு

மாநாடு படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ள சிம்பு வெந்து தணிந்தது காடு, பத்துதல போன்ற படங்களில் நடித்துள்ளார். இப்படத்தின் ரிலீசுக்காக சிம்பு காத்திருக்கிறார். மேலும் சமீபத்தில் சிம்புவின் தந்தை டி ஆர் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டதால் வெந்து தணிந்தது காடு படத்தின் விழா தள்ளிப்போனது.

இந்நிலையில் சிம்புவை பற்றி பல கிசுகிசுக்கள் சினிமாவில் வந்துள்ளது. ஆனால் தற்போது கோடிகளை கொட்டிக் கொடுத்தாலும் இந்த விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என சிம்பு மறுப்பு தெரிவித்துள்ளார். இது தற்போது மிகப் பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

அதாவது பாலிவுட் நடிகர்கள், நடிகைகள் பலர் தங்களது சமூக வலைத்தளங்களில் மதுபானங்களின் விளம்பரங்களில் நடித்து வருகிறார்கள். தமிழ் நடிகைகள் பலரும் இதுபோன்ற நடித்துள்ளனர். படத்தில் நடிப்பதை காட்டிலும் இதுபோன்ற விளம்பரங்களின் மூலம் அதிகளவு கல்லா கட்டி வருகின்றனர்.

அந்தவகையில் சிம்புக்கு பிரபல ஆல்கஹால் பிராண்ட் நிறுவனம் ஒன்று தங்களது விளம்பரத்தில் நடிக்க பெரிய ஆஃபர் கொடுத்துள்ளது. இந்த விளம்பரத்தில் நடித்தால் சிம்புவே இந்த விளம்பரத்தில் நடித்து விட்டார் என்று ரசிகர்கள் குடிக்கு அடிமையாக விடக்கூடும்.

ஆகையால் ரசிகர்களுக்கு முன்னுதாரணமாக இருந்து விடக்கூடாது என்பதால் சிம்பு மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை அறிந்த ரசிகர்கள் மற்றும் பல பிரபலங்கள் சிம்புக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இது ஒரு பக்கமிருக்க பாலிவுட் நடிகர்கள் இது போன்ற மதுபான விளம்பரங்களில் நடித்த சர்ச்சையில் சிக்கியுள்ளனர். இதைப் போன்ற விளம்பரங்களில் ரஜினி நடிப்பதில்லை அதேபோல சிம்புவும் தற்போது ஃபாலோ செய்து வருகிறாராம்.

இப்போது தான் ஒரு நிலையான இடத்தை பிடித்துள்ளோம், மீண்டும் எதற்கு சர்ச்சை என சிம்பு இந்த விளம்பரத்தை தவிர்த்திருக்கலாம் என ஒரு தரப்பு கூறுகிறது. எதுவாக இருந்தாலும் பணத்தாசை இல்லாமல் சிம்பு இந்த மதுபான விளம்பரத்தில் நடிக்காதது மிகப்பெரிய பாராட்டுக்குரிய விஷயம் தான்.

Trending News