சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

சிம்பு அகராதியிலேயே முடியாது என நடிக்க மறுத்த காட்சி.. ஷாக்கில் இருந்து மீளாத கௌதம் மேனன்

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்புவின் நடிப்பில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாகி நல்ல வசூலை பெற்று வருகிறது. அதில் சிம்புவின் நடிப்பை தான் ரசிகர்கள் வியந்து போய் பாராட்டி வருகின்றனர். படத்தில் சிம்புவின் அடையாளம் ஏதும் இல்லாமல் கேரக்டராகவே அவர் மாறியதுதான் இந்த வெற்றிக்கு காரணம்.

இதற்காக சிம்பு கடின உழைப்பையும், முயற்சியையும் கொடுத்திருக்கிறார். அந்த வகையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இப்போதே ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் இருந்த ஒரு ரகசியம் தற்போது வெளியாகி உள்ளது.

Also read:சிம்புக்கு சப்போர்ட் பண்ணிய சேனல், அந்தர் பல்டி அடித்த STR.. எவனையும் நம்பி எதையும் பேசக்கூடாது

அதாவது கௌதம் மேனன் இயக்கத்தில் இதுவரை பல காதல் திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அது அனைத்திலும் ரொமான்ஸ் காட்சிகள் ரசிகர்கள் ரசிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். அதே போன்று வெந்து தணிந்தது காடு திரைப்படத்திலும் ஒரு ரொமான்ஸ் காட்சி இருந்ததாம்.

அதில் ஹீரோ, ஹீரோயின் இருவருக்கும் இடையே லிப்லாக் காட்சி இருந்திருக்கிறது. இதை கௌதம் மேனன் சிம்புவிடம் கூறியபோது அவர் அந்தக் காட்சி வேண்டாம் என்று கண்டிப்பாக மறுத்துவிட்டாராம். சில வருடங்களுக்கு முன்பு வரை இது போன்ற ரொமான்ஸ் காட்சிகளில் அசால்டாக நடித்தவர் தான் சிம்பு.

Also read:கொடுத்த காசுக்கு மேல் கூவும் ப்ளூ சட்டை மாறன்.. அடுத்த படத்திற்கு இப்பவே கவனிக்கும் நடிகர்

ஆனால் அவர் தற்போது இது போன்ற காட்சியில் நடிக்க சங்கடப்பட்டு வேண்டாம் என்று மறுத்திருக்கிறார். அதை ஏற்றுக் கொண்ட கௌதம் மேனனும் அந்த காட்சியை வேறுவிதமாக மாற்றி அமைத்தாராம் அதன் பிறகு சிம்பு பின்னால் இருந்த படி முத்தம் கொடுத்து நடித்தாராம்.

இந்த விஷயம் தற்போது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. சமீப காலமாக சிம்பு மிகவும் கவனமாக கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். காதல் படமாக இருந்தாலும் அதில் ரொமான்ஸ் காட்சிகள் எல்லை மீறாமல் இருக்க வேண்டும் என்று அவர் முடிவு எடுத்துள்ளார். அதனால் தான் இந்த லிப்லாக் காட்சிக்கு அவர் மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

Also read:கூல் சுரேஷ் வாழ்க்கை இனி என் கையில்.. கூவுனதுக்கு சிம்பு கொடுத்திருக்கும் வாக்குறுதிகள்

Trending News